திருச்சியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வேன்: கிறிஸ்டோபர் திலக் உறுதி

1

திருச்சி: ''திருச்சியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வதற்காக, சக எம்.பி.க்களுடன் இணைந்து உழைப்பேன்'' என, தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வாகியுள்ள கிறிஸ்டோபர் திலக் கூறினார்.


திருச்சியை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியான கிறிஸ்டோபர் திலக், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட பின் முதல்முறையாக திருச்சிக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரை கட்சியினர் வரவேற்றனர். பின் அவர் அளித்த பேட்டி:


எளிய குடும்ப பின்னணியிலிருந்து வந்து, அடிமட்ட தொண்டனாக அரசியல் பயணத்தைத் தொடங்கிய எனக்கு, இவ்வளவு பெரிய பொறுப்பை காங்., தலைமை வழங்கி உள்ளது. இது எனக்கு கிடைத்த பெருமை மட்டுமல்ல; என்னைப்போல உழைக்கும் ஒவ்வொரு தொண்டனுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்.


தமிழகத்தின் பிரச்னைகளை தீர்க்கவும், திருச்சி மாவட்டத்தின் தேவைகளுக்காகவும் பார்லிமென்டில் உரக்க குரல் கொடுப்பேன். திருச்சியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல, சக எம்.பி.,க்களுடன் இணைந்து செயல்படுவேன். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement