ஈரான் மீது இதுவரை இல்லாத வகையில் 20 மடங்கு தாக்குதலை தொடுப்போம்: டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பலை தடுத்து நிறுத்தினால், இதுவரை தாக்கியதைப் போல் 20 மடங்கு கடுமையான தாக்குதலை தொடுப்போம் என ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவுடனான போரை அடுத்து, தங்கள் நாட்டை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால், 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெய் உள்ளிட்ட சரக்குகளுடன் 1,000க்கும் மேற்பட்ட கப்பல்கள் வளைகுடா கடல் பகுதியில் சிக்கியுள்ளன. இந்நிலையில் சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பலை ஈரான் தடுத்து நிறுத்தும் வகையில் ஏதேனும் நடவடிக்கையை மேற்கொண்டால், இதுவரை அவர்கள் சந்தித்த தாக்குதல்களை விட இருபது மடங்கு கடுமையான தாக்குதலை அமெரிக்கா அவர்கள் மீது தொடுக்கும்.
எளிதில் அழிக்கக்கூடிய இலக்குகளை நாங்கள் தாக்கி அழிப்போம்; இதன் விளைவாக, ஒரு நாடாக ஈரானால் மீண்டும் எழுந்து நிற்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்றதாகிவிடும். மரணம், தீ மற்றும் பாதுகாப்பற்ற பதற்றமான சூழல் ஆகியவை அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும். அத்தகைய ஒரு நிலை ஏற்படாது என்று நான் நம்புகிறேன்; அதற்காகப் பிரார்த்திக்கிறேன்.
இது அமெரிக்காவின் சார்பாகச் சீனாவுக்கும், ஹார்முஸ் நீரிணையைத் தங்கள் பயன்பாட்டிற்குப் பெருமளவில் பயன்படுத்தும் மற்ற அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்படும் ஒரு பரிசாகும். இந்தச் செயல் பெரிதும் பாராட்டப்படும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அண்ட புளுகென் தினமும் ஒரு பொய்
டிரம்ப் மனசுக்குள்ள நெனைச்சிருப்பார் - பயபுள்ளைங்க எங்க திரும்புணாலும் அடிக்கிரங்களே. சொந்த நாட்டுல tax திருப்பி குடுக்க சொல்ராய்ங்கன்னு நெனச்சா. திடீர்னு எக்ஸ்டீன் பைலை ல நம்ம பண்ணுன லீலைய எடுத்து விடுறாய்ங்க. சரி ஏப்ப சாப்பாய மாட்டுனன்னு ஈரான் ஆ தம்பி மூலமா அடிச்சா அவன் அவன் தம்பிங்க வீட்டுல இருக்குற என்னோட பசங்கள அடிக்கிறான்... இப்போ எப்படி தான் அமெரிக்கா மக்கள் attention ஆ மறுபடியும் எபஃஸ்ட்டின் பைல் அப்புறம் கோர்ட் ல இருந்து தப்பிக்கிறது???
வர வர இந்தாளு நம்ம விடியலை போல இஷ்டத்திற்கும் உருட்டுகிறார். போங்க நீங்களும் உங்களின் எச்சரிக்கைகளும்.
U.S. President Donald Trump: If Iran does anything that stops the flow of Oil within the Strait of Hormuz, they will be hit by the United States of America Twenty times harder than they have been hit thus far. Additionally, we will take out easily destroyable targets that will make it virtually impossible for Iran to ever be built back, as a Nation, again Death, Fire, and Fury will reign upon them But I hope, and pray, that it does not happen! This is a gift from the United States of America to China, and all of those Nations that heavily use the Hormuz Strait. Hopefully, it is a gesture that will be greatly appreciated.
இவரேதான் போர் விரைவில் முடியும் என்று நேற்று சொல்லியிருக்கிறார். அதற்கும் முதல்நாள் ஈரான் சரணடையும் வரை போர் நீடிக்கும் என்றார் .......
நீ தொடுக்கறியோ, இல்லை அவன் தொடுக்கறானோ, சீக்கிரம் முடிச்சு தொலையுங்கமேலும்
-
தகுதியுள்ள எந்த வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது; தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் உறுதி
-
காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் மூடல்: அம்மா உணவகங்களை திறக்க இபிஎஸ் கோரிக்கை
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை; அண்ணாமலை பேட்டி
-
திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்கும் மார்க்சிஸ்ட்!
-
மண்ணைக் காக்க பெண்கள் அதிகளவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும்!
-
லோக்சபாவில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் மீது விவாதம்