லோக்சபாவில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் மீது விவாதம்
நமது டில்லி நிருபர்
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கி நடந்து வருகிறது. அவையை மூத்த எம்பி ஜெகதாம்பிகா பால் நடத்தி வருகிறார்.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, சபையில் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, காங்., - தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய, 'இண்டி' கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இதில், 118 எம்.பி.,க் கள் கையெழுத்திட்டு இருந்தனர். பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நேற்று முதல் துவங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் லோக்சபாவில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவையை மூத்த எம்பி ஜெகதாம்பிகா பால் நடத்தி வருகிறார். விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்.பி., வேணுகோபால், ''லோக்சபா துணை சபாநாயகரை 11 ஆண்டுகளாக மத்திய அரசு நியமிக்காமல் இருக்கிறது,'' என குற்றம் சாட்டினார்.
''சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் கோரிக்கைகளை முன் வைப்பதற்கு அனுமதி மறுக்கிறார்'' என எதிர்க்கட்சி எம்பிக்கள் தெரிவித்தனர்.
பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு அவையில் தனிப்பெரும்பான்மை உள்ளதால், இத்தீர்மானம் தோற்கடிக்கப்படுவது உறுதி என எம்.பி.,க்கள் தெரிவித்தனர்.
tamilnadu speaker not allowing opponent MLAs to raise their voice whenever false information is submitted by ministers..he himself spoke onbehalf of CM also..மேலும்
-
மார்ச் 15ல் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்; விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்
-
விமானப்படை தாக்குதலில் ஈரானின் புதிய ஆட்சியாளர் படுகாயம்!
-
தகுதியுள்ள எந்த வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது; தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் உறுதி
-
காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் மூடல்: அம்மா உணவகங்களை திறக்க இபிஎஸ் கோரிக்கை
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை; அண்ணாமலை பேட்டி
-
திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்கும் மார்க்சிஸ்ட்!