தேசிய கீதம் பாட மறுத்த ஈரான் கால்பந்து வீராங்கனைகள் 5 பேருக்கு ஆஸி., விசா
சிட்னி: ஈரான் தேசிய கீதத்தை பாட மறுத்து சர்ச்சையில் சிக்கிய, ஈரான் கால்பந்து வீராங்கனைகளுக்கு, மனிதாபிமான அடிப்படையில் ஆஸ்திரேலியா அரசு விசா வழங்கியுள்ளது.
ஈரானில் பெண்களின் உரிமைகள் குறித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சில விளையாட்டு வீராங்கனைகள் அரசின் கொள்கைகளுக்கு எதிராக தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில், ஈரான் தேசிய கீதம் ஒலிக்கும்போது, அந்நாட்டை சேர்ந்த ஐந்து வீராங்கனைகள், தேசியகீதத்தை பாட மறுத்தனர். இதனால் அவர்கள் மீது ஈரானில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்தது.
இதனையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் வெளிநாட்டில் தங்க விரும்பினர். இந்நிலையில், மனித உரிமை அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவர்களுக்கு தஞ்சம் அளிக்க ஆஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், இதற்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆஸ்திரேலியா சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், அவர்களை அமெரிக்கா ஏற்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அரசு அந்த ஐந்து வீராங்கனைகளுக்கும், மனிதாபிமான அடிப்படையில் விசா வழங்கி உள்ளது.
எதிர்காலம் சிறக்கும்... அனைவருமே பச்சோந்திகளே .......
அவ அங்க வந்து கொஞ்ச நாள் கழித்து அங்குள்ள கீதம் பாடமாட்டா. போச்சுன்னு விடுவானுகளா.
இவ்வளோ தான் மூர்க்கர்களின் மதப்பற்று ஹிஹிஹி
இந்தியாவில் சில பல காங்கிரஸ் ட்ராவிடியாக்கள், மூர்க்கர்கள் மற்றும் ... தேசிய கீதம் பாட மறுக்கின்றனர். இவர்கள் எல்லோருக்கும் விசா கொடுத்து அழைத்து கொள்ளுங்கள்.
ஆஹா விசா வாங்க புதிய வழி...மேலும்
-
மேற்காசிய நிலவரம்; ரஷ்ய அதிபரிடம் போனில் விவாதித்தார் டிரம்ப்
-
எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்: உள்நாட்டு பயன்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு உத்தரவு
-
ஈரான் மீது இதுவரை இல்லாத வகையில் 20 மடங்கு தாக்குதலை தொடுப்போம்: டிரம்ப் எச்சரிக்கை
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 5 பேர் கைது
-
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்
-
வெறிநாய் கடித்து 5 சிறுவர்கள் காயம்