வெறிநாய் கடித்து 5 சிறுவர்கள் காயம்
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியிலுள்ள காளியம்மன் கோவில் தெரு, சம்புவராயன் கோவில் தெரு, மதுரை வீரன் கோவில் தெருக்களில் நேற்று மாலை சிறுவர், சிறுமியர் விளையாடி கொண்டிருந்தனர். அங்கு வந்த வெறிநாய் ஒன்று, விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் சூரியன், 7, ரித்திக், 7, மவுனீஸ், 14, மகிழன், 5, மற்றும் சிறுமி மிதுனா, 11, ஆகியோரை தலை, முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் கடித்தது.
சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டினர். காயமடைந்த சிறுவர், சிறுமியர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் வெறிநாய் தொல்லை அதிகமாக உள்ளது. ஏற்கனவே பலரை, நாய் கடித்த சம்பவம் நடந்துள்ளது. தொடர்ந்து வெறிநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும்
-
மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,360 அதிகரிப்பு
-
சிவகங்கை எம்.பி., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
-
போருக்கு மத்தியில் தாயகம் திரும்பிய இந்தியர்கள் 1,000 பேர்; மத்திய அரசு
-
கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு
-
சோளம் சாகுபடிக்காக உரமிடும் பணிகளில் தொழிலாளர்கள்
-
சிவாயம் காட்டுவாரியை துார்வார வேண்டுகோள்