சோளம் சாகுபடிக்காக உரமிடும் பணிகளில் தொழிலாளர்கள்

கரூர்:கரூர் அருகே, அமராவதி ஆற்றுப்பகுதியில், சோளம் சாகுபடிக்-காக உரமிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீர், தற்போது குறைக்கப்பட்டுள்ளது. சம்பா நெல் அறு-வடை நிறைவு பெற்றதால், குறுகிய கால பயிரான சோளம், கால்நடைகளின் தீவனத்துக்காக, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தற்-போது, நெல் அறுவடை செய்யப்பட்ட நிலங்களில், கோடை மழையை நம்பி, கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப் பகுதி-களான அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை, கிருஷ்ண-ராயபுரம் வட்டாரத்தில் சோளம் பயிரிட களை கொல்லி உர-மிடும் பணிகள் தொடங்கியுள்ளது.தமிழகத்தில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்-துள்ள நிலையில், சோளப்
பயிர்கள் நன்கு வளர களை கொல்லி உரமிடுதல் அவசியம் என,
விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement