கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

குளித்தலை,:கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு, அரிவாள் வெட்டு விழுந்தது.

குளித்தலை அடுத்த வடசேரி பஞ்., பால சமுத்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 44, விவசாய தொழி-லாளி. அதே ஊரை சேர்ந்த சந்திர
சேகர், 26. இவர் குடும்ப செலவுக்காக கோபாலகிருஷ்ணனிடம், 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். அதை பலமுறை கோபால கிருஷ்ணன் கேட்டும் தராமல் இழுத்தடித்து வந்தார். இந்நி-லையில், கோபால
கிருஷ்ணன் சந்திரசேகர் மீது புகார் அளித்திருப்பதை கேள்விப்-பட்டு, கடந்த 9ம் தேதி மாலை 4:30 மணியளவில் சாலையில் நடந்து சென்ற கோபாலகிருஷ்ணனிடம், தகாத வார்த்தையால் பேசி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினார். இதில் வலது பக்க காதின் அருகே வெட்டு காயம் ஏற்பட்டது. மணப்பாறை தனியார் மருத்துவமனையில் கோபால கிருஷ்ணன் சிகிச்சை பெற்று வருகிறார்.
தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து, சந்திரசேகரை கைது செய்தனர்.

Advertisement