மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,360 அதிகரிப்பு

1

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 15,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், (மார்ச் 09) ஆபரண தங்கம், கிராம் 14,950 ரூபாய்க்கும், சவரன், 1,19,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 290 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


நேற்றைய நிலவரம்



நேற்று (மார்ச் 10) , தங்கம் விலை கிராமுக்கு, 100 ரூபாய் உயர்ந்து, 15,050 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 800 ரூபாய் அதிகரித்து, 1,20,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 10 ரூபாய் உயர்ந்து, 300 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 10,000 ரூபாய் அதிகரித்து, 3 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இன்றைய நிலவரம்




இந்நிலையில் இன்று (மார்ச் 11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 15,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


கடந்த 2 நாட்களில் சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை மாற்றிமின்றி ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Advertisement