தமிழகத்தில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைவு: உள்துறை செயலர், டிஜிபி பேட்டி
சென்னை: '' தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது,'' என தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து உள்துறை செயலர் தீரஜ்குமார், சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உள்ளிட்டோர் இணைந்து நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது தீரஜ்குமார் கூறியதாவது: தமிழகத்தில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குற்றங்கள் குறித்து தவறான தகவல் பரப்பப்படவதால் ஆதாரங்களுடன் விளக்கம் தருகிறோம்.திருட்டு, பலாத்கார வழக்குகளில் எண்ணிக்கை குறைந்துள்ளது.
2021ல் தமிழகத்தில் 1597 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்ந்து குறைந்து வருகிறது. 2024 ல் 1490 வழக்குகளும் 2025 ல் 1461 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பலாத்கார வழக்குகளும் குறைந்துள்ளன. 2021ல் 422 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை 2025 ல் 401 ஆக உள்ளது.
போக்சோ வழக்கு
போக்சோ மற்றும் எஸ்சிஎஸ்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் அதிக புகார்கள் வருகின்றன. குற்றம் அதிகம் எனக்கூறி சமூகத்தை தவறாக பார்க்க ஆரம்பித்துவிட்டால், புகார் சொல்வதற்கு தயக்கம் வந்துவிடும். நாம் தாழ்ந்துவிட்டோமோ என நினைத்து விடுவர் அப்படி கிடையாது. போக்சோ குற்றம் நடந்தால் புகார் அளிக்க வேண்டும். அனைத்து குற்றங்களையும் தீர்க்க வேண்டும். சமீபத்தில் வந்த குற்றங்களில் கூட இரண்டு வழக்குகளில் தான் விசாரணை நடந்து வருகிறது. மற்ற வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக போலீசை பொறுத்தவரை எந்த குற்றம் நடந்தாலும் அது தீவிரமான குற்றம் தான். அது சிறியது பெரியது என பார்க்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம், எடுப்போம். அதில் சந்தேகம் கிடையாது.புள்ளி விவரத்துக்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. புள்ளி விவரம், நம்மை பற்றி ஆய்வு செய்து கொள்ள முக்கியம். ஆனால், அதே நேரத்தில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொடுத்து புகார் கொடுக்க வேண்டும் என சொல்லும் போது புள்ளி விவரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.
விசாரணை கைதி மரணம்
விசாரணை கைதிகள் மரணம் என்பதை பொறுத்துக் கொள்ள முடியாது.அஜித்குமார் வழக்குகளில் அரசின் நிலைப்பாட்டை பார்த்துள்ளீர்கள். வெளிப்படையாக விசாரணை நடத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினோம். வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடக்கிறது என மக்கள் தெரிந்து கொள்ள சிபிஐ விசாரணைக்கு மாற்றினோம். சிபிசிஐடி சிறப்பாக விசாரணை நடத்தும். ஆனால், வெளிப்படைத்தன்மைக்காக இந்த நடவடிக்கை எடுத்தோம்.விசாரணை கைதிகள் மரணத்தில் அரசின் நிலைப்பாடு நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மானாமதுரை விசாரணை கைதி மரணம் குறித்து விசாரித்து வருகிறோம். சிபிசிஐடி விசாரித்து வருகிறது. அதில் உள்ள என்ன உண்மை இருக்கிறது அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அரசு உறுதியாக உள்ளது.
100 சதவீதம் சந்தேகம் வேண்டாம். உறுதியான உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. மக்களை எப்படி கையாள வேண்டும். விசாரணை நடத்த வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஒன்று இரண்டு சம்பவங்கள் இருக்கும் போது, அரசின் கடமை எப்படி இருக்கிறது. வெளிப்படையான முறையில் நேர்மையான விசாரணை நடத்தி தவறுஇருந்தால் நடவடிக்கை இருக்கிறதா இல்லையாஎன்பது குறித்து பார்க்க வேண்டும்.
பாலியல் வழக்கு
பாலியல் வழக்குகள் பொறுத்தவரை தமிழக அரசு சில ஆண்டுகளில் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். இதற்கு முன்பு இப்படி நடவடிக்கை எடுத்து இருக்க முடியாது. விசாரணை உடனடியாக நடக்கிறது. பாரபட்சமற்ற முறையில் நேர்மையாக விசாரணை நடக்கிறது. பல வழக்குகளில் தீர்ப்பு வந்துள்ளது. போக்சோ வழக்குகளில் விசாரணை எப்படி நடக்கிறது என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.
போதைப்பொருள்
போதைப்பொருட்கள் சட்டம் ஒழுங்குக்கு பிரச்னையாக இருக்கிறதா இல்லையா என விவாதிக்க வேண்டாம்.போதைப்பொருட்கள் பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கை முன்புஎடுத்தது இல்லை. 2021 ல் 6800 போதை வழக்குகள் பதிவாகின. 2025 ல்11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.மருத்துவமனைகளில் மறுவாழ்வு மையம் ஏற்படுத்தி உள்ளோம். பள்ளி, போலீஸ், கல்லூரிகள், சுகாதாத்துறை, உள்துறை மூலம் எடுக்கப்பட்ட நடவடடிக்கைகள், நாட்டில் சிறந்தது என சொல்லலாம்.
நிரந்தர டிஜிபி
தமிழக அரசு, நிரந்தர டிஜிபியை நியமனம் செய்ய ,யுபிஎஸ்சிக்கு பரிந்துரை அனுப்பி உள்ளோம். அதன் பிறகு யுபிஎஸ்சி கூட்டம் ஒன்றை கூட்டும். அதன் பிறகு நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் கூறியதாவது: பெரிய குற்றங்கள், வழக்குகள் புகார் செய்வது குறைந்துள்ளது. சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, பெரிய நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்களுக்கு போலீஸ், அரசு இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. போலீசை பொறுத்தவரை குற்றங்கள் பெரியது அல்லது சிறியது என இருந்தாலும் அதனை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றங்களை புகார் அளிக்கசெய்ய வேண்டும் என மக்களிடம் சொல்கிறோம். பத்தாண்டுகளுக்கு முன்பு வந்தது போக்சோ சட்டம். அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. அரசின் அணுகுமுறையால், போலீஸ், பள்ளிகல்வித்துறை சமூக நலத்துறை சேர்ந்து போக்சோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
குழந்தைகளை தவறாக ஆசிரியர்கள் தொட்டால் தைரியமாக வந்து சொல்கின்றனர். இது 10 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கவில்லை. சில குற்றங்கள் போக்சோவில் வருகிறது. ஜாதி பெயர் சொன்னாலும் எஸ்சி எஸ்டி வழக்கு பதிவு செய்கிறோம்.இந்த சட்டங்களில் போலீசும், அரசும் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். இதனால் புகார்கள் வருகிறது. இதனை விசாரிக்க வேண்டும் எனக்கூறியுள்ளோம். புள்ளி விவரத்தை பற்றி கவலைப்படாமல் விசாரிக்க வேண்டும் எனக்கூறியுள்ளோம். இதனால், போக்சோ மற்றும் எஸ்சி எஸ்டியில் வழக்குகள் பதிவாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நடவடிக்கை
தூத்துக்குடியில் மாணவி பலாத்கார செய்யப்பட்ட விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடக்கிறது. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களின் குறிக்கோள். அதில் தவறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.நாங்குநேரி கொலை விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஜாதியக் கொலை
இதில் மக்கள் பார்க்கும் கண்ணோட்டமும், எங்களின் கண்ணோட்டமும் ஒன்றாக உள்ளதா என்பதை அறிய புள்ளிவிவரத்தை பார்க்க வேண்டும்.2021ல் இருந்து பார்க்கும் போது குறைந்துள்ளது. ஒவ்வொரு கொலைக்கும் காரணம் இருக்கிறது. அதற்கு நடவடிக்கை எடுக்கிறோம்.சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கு பத்திரிகையாளர்களும் போலீசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
@block_B@
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம், வன்கொடுமை செய்து கொலை என்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. தேர்தல் நேரத்தில் இவை மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அரசு தரப்பினருக்கு ஏற்பட்ட அச்சமே இந்த பேட்டிக்கு காரணம் என்கின்றனர், அரசியல் கட்சியினர்.block_B
கூச்சமே இல்ல......
கொலை கொள்ளை கற்பழிப்பு பலாத்காரம் திருடு லஞ்சம் டிரக் கஞ்சா போன்ற காரியங்களை பெரிய குடும்ப நன்மைக்காக குற்றங்களாக விடியல் ஆட்சியில் கருதக்கூடாது என்ற வாய்மொழி ஊத்திரவால் காவல் நிலையங்களில் இவை பதிவிடக்கூடாது என்பதால் குற்ற எண்ணிக்கை குறைந்துள்ளது. அடுத்த விடியல்ஆட்சியில் சட்ட ரகு இவைகளை குற்றம் என்று கூறினால் சிறையில் அடைக்க ஒரு சட்டத்தை முன் மொழிவார்.
FIR போடறதே கிடையாது. அப்புறம் எப்படி கணக்கு தெரியும்.
சிந்திக்கிறதா, DMK பெரிய தலங்க செய்யிற முதல் வேலையே உ.பி. தொண்டர்களை சிந்திக்க விடாமல் செய்வதுதான். அதனால்தான் இவர் இப்படி பேசுகிறார். அவரை குற்றம் சொல்லி பயனில்லை. இதுதான் அவங்க பகுத்தறிவு
கூசாம எப்படி பொய் சொல்றார்கள்
இவுக நிலாவில் இருக்கற தமிழ்நாட்டின் விவரம் சொல்ற மாதிரி இருக்கு.
தினமும் காலையில் எழுந்ததும் ஒரு கற்பழிப்பு கொள்ளை நடக்குது. இது தெரில
பூனை கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது அதனல அது பூலோகம் இருந்து போச்சதுன்னு நினைக்குது
மாநில போலீஸ் துறை மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் கவர்னர் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.... மாநில போலீஸில் ஐம்பது சதவீதம் பிற மாநில ஆட்களாக இருந்தால் மட்டுமே லோக்கல் அல்லக்கை அரசியல் கட்சிகளின் பிடியில் சிக்காமல், குற்றவாளிகளோடு கூட்டுசேராமல் பணியாறறுவார்கள்... அல்லது மொழிவழி மாநில அமைப்பு கலைக்கப்பட வேண்டும்.. அப்போது ஒரு மொழி ஒன்றிரண்டு பெரும்பான்மை சாதி ஆதிக்கம் போலீஸ் துறையில் முடிவுக்கு வரும்..
இவையெல்லாம் போதாது என கூறுகிறார்களோ. ஆளும் கட்சிக்கு எந்த குற்றவுணர்வும் இருக்காது. ஏனெனில் அது அந்த கட்சியின் dna வில் உள்ளது. ஏதோ ஒன்று எதோடு சேர்ந்து எதையோ திக்குமாமே அந்த ரகமா நீங்க.
இவர்களை உட்காரவைத்தது கன்ட்ரோல் பண்ணத்தான் compare பண்ண அல்லமேலும்
-
பசவேஸ்வரா - மாரம்மா கோவிலில் கொள்ளை
-
நன்னடத்தை அடிப்படையில் 31 கைதிகள் இன்று விடுதலை
-
என்.எல்.சி., சேர்மனுக்கு உயரிய விருது
-
ஹெரிடேஜ் நெட்ஒர்க்கில் இணைந்த பாலக்காடு ஐ.ஐ.டி.,
-
பஸ்சில் பயணித்த இருவரிடமிருந்து 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளை
-
முதுமலை வனப்பகுதியில் தொடரும் வறட்சி வளர்ப்பு யானைகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு