என்.எல்.சி., சேர்மனுக்கு உயரிய விருது

நெய்வேலி என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளிக்கு, கவர்னன்ஸ் நவ் நிறுவனம் பொதுத்துறை தலைமைத்துவ விருது வழங்கி கவுரவித்துள்ளது.

டில்லியில் நேற்று 'கவர் னன்ஸ் நவ்' 12 வது பொதுத்துறை விருதுகள் வழங்கும் விழா நடந்தது. கவர்னன்ஸ் நவ் நிறுவனம் வழங்கும் பொதுத்துறை விருதுகள், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களுக்கிடையே நிலவும் இணையற்ற தலைமைத்துவம், புதுமை மற்றும் சிறந்த நிர்வாக நடைமுறைகளை அங்கீகரிக்கும் ஒரு தளமாகும்.

என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிலையான வளர்ச்சி பாதையை கணிசமாக வலுப்படுத்தியதற்காகவும், என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளிக்கு தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், வியூகம் மற்றும் நிறுவன வளர்ச்சிக்கு வித்திட்ட ஆக்கபூர்வமான மாற்றங்களைப் பாராட்டி இந்த உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி பேசுகையில், 'இந்த அங்கீகாரத்திற்காக எனது நன்றியைத் தெரிவித்தது கொள்கிறேன். இவ்விருதினை என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர்களுக்கும் சமர்ப் பிக்கிறேன்.

இந்தச் சாதனை, நிறுவனத்தை மேன்மையை நோக்கித் தொடர்ந்து வழிநடத்திச் செல்லும் ஊழியர்களின் கூட்டு முயற்சி, புதுமை மற்றும் தளராத அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது,' என்றார்.

Advertisement