வாகனங்கள் மோதல் 3 போலீசார் காயம்

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை புறவழிச்சாலையில் கண்டெய்னர் லாரி மீது போலீசார் சென்ற வாகனம் மோதிய விபத்தில் 3 போலீசார் காயமடைந்தனர்.

கள்ளக்குறிச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் அரசு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக கடலுார் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக கள்ளக்குறிச்சிக்கு நேற்று காலை வந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று இரவு 7:௦௦ மணியளவில் வாகனத்தில் போலீசார் கடலுாருக்கு புறப்பட்டனர்.

தலைமைகாவலர் சுந்தரமூர்த்தி என்பவர் வாகனத்தை ஓட்டினார். உளுந்துார்பேட்டை புறவழிச்சாலையில் சென்றபோது, அதே திசையில் முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்தார்.

அப்போது, போலீசார் சென்ற வாகனம் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் சுந்தரமூர்த்தி உட்பட 3 போலீசார் காயமடைந்தனர்.

தகவலறிந்த உளுந்துார்பேட்டை போலீசார் காயமடைந்த 3 காவலர்களையும் மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement