முன்மாதிரியாக திகழும் தலைவர் மோடி; ஆஸி., முன்னாள் பிரதமர் புகழாரம்
கான்பெரா: பாஜ ஆட்சியில் இந்தியா ஒரு சர்வாதிகார நாடாக மாறிவிட்டது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்று ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபாட் தெரிவித்துள்ளார்.
புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்து இந்தியா சார்பில் நடத்தப்பட்டு வரும் ரைசினா மாநாடு குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; டில்லியில் 2016ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ரைசினா மாநாடு, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் மற்றும் சீனாவின் போவாவ் மாநாடுகளைக் காட்டிலும் மிகவும் சிறந்தது. ஏனெனில், இந்த மாநாட்டில் அரசியல் ரீதியாக பலம் படைத்தவர்கள் யாரும் ஆதிக்கம் செலுத்தப்படுவதில்லை. அதேவேளையில், இந்த மாநாட்டை நடத்தும் அரசையும் புகழ்ந்து பாடவில்லை.
ஒவ்வொரு மாநாட்டிலும் பிரதமர் மோடி ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார். அவர் தொடக்க அமர்வில் கலந்துகொண்டு முதன்மை உரையைக் கேட்கிறார். ஆனால் அவர் பேசுவதில்லை. அமெரிக்க மற்றும் சீன அதிபர்களுக்குப் பிறகு, உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக அவர் இருக்கலாம். இருப்பினும் தலைமை தாங்குவதோடு மட்டுமல்லாமல் மற்றவர்கள் சொல்வதைக் கேட்கும் பண்பையும் அவர் கொண்டுள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தபோதிலும், அதிகார மமதை அவரிடம் இல்லை.
பாஜ ஆட்சியில் இந்தியா ஒரு சர்வாதிகார நாடாக மாறிவிட்டது என்ற கருத்து முற்றிலும் தவறானது. சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள், துடிப்பான ஊடகங்கள் மற்றும் வலுவான சுதந்திரமான நீதித்துறை ஆகியவற்றைக் கொண்ட எந்தவொரு நாட்டிலும் சர்வாதிகார போக்கு இருக்காது. மேலும், எந்தவொரு சர்வாதிகார நாடும் எதைப் பற்றியும் விவாதிக்கத் தடையில்லாத ஒரு மாநாட்டை நடத்தாது. இதற்கு உதாரணமாக, இந்த ஆண்டு நடந்த மாநாட்டில் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சரும், ஈரான் துணை வெளியுறவு அமைச்சரும் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்தது தான், இவ்வாறு அவர் கூறினார்.
எதில்? உலகம் சுற்றுவதில் முன்மாதிரியா??
உன்னை போல டாஸ்மாக் முன்மாதிரியாக இருந்தால் உன் சந்ததி விளங்கும்..செய்வாயா
அறிவாலய வாயிலில் முதல் பிச்சை
டாஸ்மாக் கிராக்கிகள், பிச்சை கிராக்கிகள் எப்போதும் அதே நினைவு தான் நான் அந்தக் கூட்டம் இல்லை
மோடியை பார்த்து உலகமே வியக்கிறது.. இந்தியர்களை ஒரு விலங்கு போல் பாவித்த உலக நாடுகள் இன்று கடவுளைப்போல் போல் பார்க்கிறது.. சிவ பெருமானின் அவதாரம் மோடிஜி
ஆஸி ப்ரதமரும் சங்கியாக மாறிவிட்டார்.₹200 கிராக்கிகளுக்கு நல்ல தலைப்பு கிடைத்துள்ளது.
ஐயோ முடியல சாமி... ரெண்டுமே வேஸ்டுபீஸு
சொல்லிட்டாரு வாழ்நாள் கொத்தடிமை சீனு வெத்து வெட்டு
உன்னய விஞ்ஞானரீதியாக ஆட்டய போட விட்டிருந்தால் நல்லவன் என சொல்லியிருப்பீர்
பப்பு இதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியுதா இல்லை.... கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறாயா ?
அவரும் ... ????
not him alone, all islamic countries heads tooமேலும்
-
தேர்தல் அறிவிப்புக்கு முன் மம்தா வெளியிட்ட அறிவிப்பு; பாஜ விமர்சனம்
-
தேர்தல் அறிவிப்பு எதிரொலி; தலைமைச் செயலகத்தில் முதல்வர் படங்கள் அகற்றம்
-
அழுத்தத்துக்கு அடிபணிந்தால் விஜய் அரசியல் எதிர்காலம் சூனியமாகும்; திருமாவளவன்
-
மே.வங்கத்தில் இம்முறை ஏன் 2 கட்டங்களாக ஓட்டுப்பதிவு; தேர்தல் கமிஷன் விளக்கம்
-
ஸ்ரீ மஹா பெரியவா விருது
-
2021 தேர்தலை காட்டிலும் 17 நாள் தள்ளிப்போனது தமிழக தேர்தல்!