நேதாஜியின் அஸ்தியை கொண்டு வர கோரிய கொள்ளுப் பேரன் மனு: நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்
நமது டில்லி நிருபர்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தியை ஜப்பானில் இருந்து கொண்டு வரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம்கோர்ட் நிராகரித்தது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தி ஜப்பானின் ரென்கோஜி கோவிலில் வைக்கப்பட்டு உள்ளது. அதை இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி கொள்ளுப் பேரன்களில் ஒருவரான ஆஷிஷ் ராய் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு, சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, 'நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய மாபெரும் தலைவரின் அஸ்தியை இந்தியாவிற்கு கொண்டு வருவது தான் பொருத்தமாக இருக்கும்,' என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தி தற்போது எங்கு உள்ளது,” என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சிங்வி, ஜப்பானில் உள்ள ரென்கோஜி கோயிலில் நேதாஜியின் அஸ்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவின் பல மூத்த தலைவர்கள் ஜப்பான் செல்லும் போது அங்கு சென்று மரியாதை செலுத்துவது வழக்கமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து தலைமை நீதிபதி கூறியதாவது:
* நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தியாகத்திற்கு இந்த நீதிமன்றம் தலை வணங்குகிறது. ஆனால், இந்த மனுவை நேதாஜியின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்கிறார்களா?.
* இந்த விவகாரத்தில் நேதாஜி குடும்பத்தினர் தேவைப்பட்டால், தாமே நேரடியாக மனு தாக்கல் செய்யலாம். இதே போன்ற மனுவை கடந்த 2024ல் இந்த நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளது.
இந்த மனுவை விசாரிக்க முடியாது என தெரிவித்து, மனுவை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்தது.
நேதாஜி விஷயத்தில்... நேரு தலைமையிலான முந்தைய கான் கிராஸ் அரசு.... நாட்டு மக்களுக்கு என்னவெல்லாம் கேடு செய்து இருக்கிறார்கள் என்ற உண்மை விவரங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும்
தெளிவில்லாத செய்தி வழக்கு தாக்கல் செய்தவர் கொள்ளு பேரன் அப்புறம் குடும்பத்தினர் தாக்கல் செய்யவேண்டும் என்றல் அவங்க எல்லாம் இப்ப உயிரோட இருப்பாங்களா
Netaji died in india, the original Indian knows this
கமலா நேரு TB நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் ஐரோப்பாவில் இருந்தார். அவரை அவரது கணவரோ அல்லது குடும்பத்தாரோ கவனிக்கவில்லை. நேதாஜி அப்போது ஐரோப்பாவில் இருந்தார். இதை கேள்விப்பட்டு வருத்தப்பட்ட அவர், கமலா நேருவை சுவிற்சர்லாந்தில் உள்ள நல்ல ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பண உதவி செய்தார். அவரது கடைசி காலம் தனிமையில் உயிர் பிரிந்தது. அப்படிப்பட்டவருக்கு அவரது குடும்பம் செய்த துரோகம் மிக மோசமானது.
please note Nehru was in jail then and on his request Netaji helped .
ஜப்பானிடமே நேரடியா கேக்கலாமே..
வலை தளத்தில் ஒரு சிறிய கட்சித்தலைவர் பேசியது. நேதாஜியைப் பிடித்து ப்ரித்தானியரிடம் ஒப்படைக்க நேரு ஒப்புக் கொண்ட கடிதம் உள்ளது.அதை ப்ரசுரம் செய்ய வேண்டும் என்பது. இரண்டாவது நமது உன்னத தலைவர் போஸ் அவர்கள் மூச்சடைக்கப்பட்டு ரஷியாவில் இறந்ததாகவும் அப்போதைய இரஷ்ய ஆட்சியாளர் ஸ்டாலின் நம்ம ஊர் துண்டுச் சீட்டு அல்ல தான் காரணம் என்றும் அதை தற்போதைய இரஷிய அதிபர் புடின் ஒப்புக் கொண்டதாகவும் வலை தளத்தில் அந்த நபர் பேசியுள்ளார். இதை முறைப்படி விசாரித்து உண்மையை உலகிற்கு உரைக்கலாமே. நேரு எனும் பித்தளை மீது பூசியுள்ள போலி தங்க முலாமை வெளுத்து விடலாம்.
நேதாஜி சுதந்திர இந்தியாவை பிரகடனப்படுத்தி அதன் முதல் பிரதமரும் கூட. உண்மையான சுதந்திர போராளி. அவருடைய அஸ்தியை கூட கொணர முடியாதது வருந்தத்தக்கது.
உச்சத்திலும் நேரு விசுவாசிகள்/காங்கிரசின் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதற்கு அத்தாட்சி.. காரணம் அஸ்தி வந்தால் எப்படிக் கொல்லப்பட்டார் என்பது கூடத் தெரிய வரலாம்.. உதாரணமாக அதிகபட்ச நச்சு உலோகம் செலுத்தப்பட்டு இறந்தாரா என்பது தெரிய வரலாம் .....
Nethaji subhas Chandra Bose was captured cunningly by nehru backed Britishers. At the instance of Neru he was handed over to Russians with the active help from dead rat indian communists. In Russia he died at siberian ice desert, after being tortured
கொள்ளுப் பேரன் தானே வழக்கு தொடர்ந்துள்ளார். இன்னும் யார் வந்து வழக்கு தொடுக்க வேண்டும்? அனைத்து உறவினர்களையும் அழைத்து கேளுங்கள். சம்மன் கொடுத்து வர வழிக்கவும். இன்னும் நேரு காந்தி காலத்திலேயே நீதிமன்றம் இருந்தால் எப்படி ? சுதந்திரம் பெற்று எழுபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு சிறந்த ஆற்றல் மிக்க இந்தியத் தேசத் தலைவனுக்கு எப்போது நீதி கிடைக்கும் ? நீதிமன்றங்கள் விழிக்க வேண்டும்.
கொள்ளு பேரன் நேதாஜி குடும்பம் இல்லையா.மேலும்
-
குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி
-
ஹோட்டலில் ஜூஸ் வாங்கியவரிடம் எரிவாயுவுக்கும் கட்டணம் வசூல்
-
தேனியில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் திறப்பு விழா நடிகர் ரவிமோகன் பங்கேற்பு
-
குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர்
-
கணவரை விடுவிக்கும்படி வேண்டிய பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்திய இன்ஸ்பெக்டர்
-
போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞருக்கு விநோத தண்டனை