மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியால் சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ஐநா எச்சரிக்கை
புதுடில்லி: மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அன்டோனியோ குட்டெரெஸ் வெ ளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் உருவாகி வரும் நெருக்கடி சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பொதுமக்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பதற்றத்தைக் குறைத்து பேச்சுவார்த்தை நடத்துவதே ஒரே வழி. அனைத்து தரப்பினரும் விரோதப் போக்கை நிறுத்தி, சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்தி, பொதுமக்களைப் பாதுகாத்து, உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நான் கடுமையாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே, மேற்காசிய நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரான் உடனடியாக அனைத்து தாக்குதல்களையும், அச்சுறுத்தல்களையும், ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள தடைகளையும் நிறுத்த வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.
அங்கேயும் ஒரு துண்டுச்சீட்டு ஆள்.
ஒரு உபயோகம் இல்லாத பல் பிடுங்கிய பாம்பு.
At last UN has opened its mouth
அவன் நாட்டு மக்கள் போராடிய பொது சுமார் 8000 பேரை கொண்ணவனை என்னமோ தியாகி போல பேசனுமுண்ணு சொல்ற...
அட ....... ஐநா புச்சு புச்சா கண்டுபுடிக்குதே ????
ஐ நா என்று ஒன்று இருக்கிறதா. இப்போது ஈனஸ்வரத்தில் மிகவும் மெல்லியதாக அதன் குரல் கேட்கிறதே
இதக் கண்டுபுடிச்சு சொல்லவே இத்தனை நாள்! இப்படி ஒரு சில நாடுகள் மட்டுமே அதிகாரம் செலுத்தும் தனக்கென்று தனியாக எந்த ஒரு அதிகாரமும் இல்லாத இந்த ஐ.நா சபை இன்னும் உலகிற்கு தேவைதானா?மேலும்
-
கோவையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி கைது
-
விஜய் கட்சியுடன் தன்னை ஒப்பிடக்கூடாது என்கிறார் சீமான்
-
தனியார் ரயில்வே தடங்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை; அண்ணாமலை வலியுறுத்தல்
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
-
சென்னையில் சிலிண்டர் வெடித்து விபத்து; 2 குழந்தைகள் பலி
-
டில்லியில் விசாரணை; நடிகர் விஜய்யிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி