கள்ளக்காதலில் இருந்த தம்பி - தங்கையை வாளால் வெட்டி கொன்ற அண்ணன் கைது
குடகு: கள்ளக்காதலில் இருந்த தம்பி - தங்கையை, வாளால் வெட்டி கொன்ற அண்ணன் கைது செய்யப்பட்டார்.
குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா குந்தச்சேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்து, 64, குன்ஹாராம், 47, யசோதா, 45. இவர்கள் மூவரும் உறவு முறையில் அண்ணன், தம்பி, தங்கை.
யசோதாவுக்கு திருமணமாகவில்லை. அவர் தனியாக வசித்தார். சந்து, குன்ஹாராமுக்கு திருமணமாகி விட்டது. தங்கள் குடும்பத்துடன் தனியாக வசித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மனைவி கல்யாணியை பிரிந்த குன்ஹாராம் தனியாக வசித்தார்.
இந்நிலையில், யசோதாவுக்கும், குன்ஹாராமுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். கடந்த சில மாதங்களாக இருவரும் தனியாக வாடகை வீடு எடுத்து, ஒரே வீட்டில் கணவன், மனைவி போல வசித்தனர். இது, சந்துவுக்கு பிடிக்கவில்லை. கள்ளக்காதல் உறவை கைவிடும்படி தம்பி, தங்கையை பல முறை எச்சரித்தார். அவர்கள் கேட்கவில்லை. மூன்று பேருக்கும் இடையே அடிக்கடி சண்டையும் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு, மூன்று பேரும் சேர்ந்து ஒன்றாக மது அருந்தினர். அப்போது கள்ளக்காதல் விவகாரத்தில் மூன்று பேருக்கும் தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். கோபத்தில் வீட்டிற்கு சென்ற சந்து, வாளை எடுத்து வந்து, தம்பி, தங்கையை சரமாரியாக வெட்டினர். ரத்தவெள்ளத்தில் இருவரும் துடிதுடித்து இறந்தனர். அங்கிருந்து சந்து தப்பினார்.
யசோதா, குன்ஹாராம் கொலை செய்யப்பட்டது நேற்று காலை அக்கம்பக்கத்தினருக்கு தெரிய வந்தது. தகவல் அறிந்த எஸ்.பி., பிந்துமணி, பாகமண்டலா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில், யசோதா மீது சந்துவுக்கு ஒரு கண் இருந்ததும், தன் தம்பியுடன் கள்ளக்காதலில் இருந்ததால், அதை பொறுத்துக் கொள்ள முடியாமல், வெட்டி கொன்றதும் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த சந்து நேற்று மதியம் கைது செய்யப்பட்டார்.
மேலும்
-
பாஜ ஆட்சியில் இந்தியா சர்வாதிகார நாடு என்பது முற்றிலும் தவறு; சொல்கிறார் ஆஸி., முன்னாள் பிரதமர்
-
ஈரான் புதிய ஆட்சியாளர் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது; இஸ்ரேல் பிரதமர்
-
நேதாஜியின் அஸ்தியை கொண்டு வர கோரிய கொள்ளுப் பேரன் மனு: நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்
-
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியால் சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ஐநா எச்சரிக்கை
-
ஒரு காலை இழந்த ஈரானின் புதிய ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி? கோமாவில் இருப்பதாக தகவல்
-
இன்று இனிதாக ... (13.03.2026) சிவகங்கை