கோவையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி கைது

42

நமது நிருபர்




கோவை புதூர் 4வது போலீஸ் பட்டாலியன் படைப்பிரிவில் பணிபுரிந்த பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி செந்தில் குமார் கைது செய்யப்பட்டார்.


கோவை புதூரில் சிறப்பு போலீஸ் படை பிரிவு செயல்படுகிறது. கமாண்டன்ட் ஆக எஸ்.பி., ரேங்க் அதிகாரி செந்தில்குமார் பதவி வகித்தார். சமீபத்தில் பயிற்சிக்கு வந்த ஒரு பெண் போலீசிடம் தகாத முறையில் செந்தில்குமார் நடந்துகொண்டதாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட பெண் போலீஸ், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் விசாரணைக்குழுவிடம் புகார் அளித்தார்.

கமாண்டண்ட் செந்தில்குமார் மீது பெண் போலீஸ் கூறிய புகார் படி தமிழக அரசு, அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. புகார் மீதான விசாரணை முடியும் வரை சென்னையில் உள்ள தமிழக சிறப்பு போலீஸ் படை தலைமையகத்தில் செந்தில்குமார் தங்கியிருக்க வேண்டும்; அரசு அனுமதி பெறாமல் வெளியூர்களுக்கோ வெளிநாட்டுக்கோ செல்லக்கூடாது எனவும் தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டு இருந்தார்.



விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த எஸ்.பி. செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். பாலியல் புகாரில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அன்புமணி அறிக்கை




இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி, ''வேலியே பயிரை மேய்ந்தால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு ஏது? பெண்கள் உள்ளிட்ட மக்களைக் காக்க வேண்டிய போலீஸ் அதிகாரிகளே பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது கண்டிக்கத்தக்கது'' என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.



மேலும், ''தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டன. இதற்கு காரணம் திமுக அரசின் செயலற்ற தன்மையும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கட்டுப்படுத்தப்படாததும் தான். இதற்கெல்லாம் காரணமான திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்'' என அன்புமணி கூறியுள்ளார்.



@block_P@

சட்டத்தின் மீது பயமில்லை!

இது குறித்து தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம் கோவை புதூரில் உள்ள, தமிழக சிறப்புக் காவல்படை அதிகாரி செந்தில்குமார், பெண்காவலரை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியதால், இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.


தமிழகம் முழுவதும், பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழலில், பெண் போலீஸ்யே பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்போதும், போலீஸ் அதிகாரியே இதனைச் செய்திருப்பதும், திமுக ஆட்சியில் தமிழகம் எத்தனை அவலநிலையில் இருக்கிறது என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது.


திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை. பெண் போலீசுக்கு, போலீஸ் ஸ்டேஷனிலேயே பாதுகாப்பில்லாமல் இருக்கும்போது, கையாலாகாத திமுக ஆட்சியில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக உணர்வார்கள்? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.block_P


@block_G@

மிகுந்த அதிர்ச்சி!

இது குறித்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: திறனற்ற திமுக ஆட்சியில் காமுகர்களாக மாறிய போலீசார். கோவையில் போலீஸ் ஸ்டேஷன் அலுவலக அறையில் வைத்தே பெண் போலீசாரை மதுக்கரை சிறப்பு காவல்துறை கமாண்டண்ட் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

"வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்று போலியாக முழங்கும் திமுக ஆட்சியின் நிர்வாகத் திறனின்மையால் தெருதோறும் காமுகர்கள் பெருகி வருவது ஒருபுறமிருக்க, மறுபுறம் காவல் அதிகாரிகளே காமுகர்களாக மாறிவருவது பெண்கள் பாதுகாப்பை ஒட்டுமொத்தமாகக் கேள்விக்குறியாக்குகிறது.


வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை. போலீஸ் ஸ்டேஷனில் காக்கிச் சட்டை அணிந்த பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை. தமிழகத்தின் வரலாற்றில் இப்படி ஒரு கொடூரத்தை இதுவரை யாரும் பார்த்ததும் இல்லை. இனி இந்தக் கேடுகெட்ட திமுக ஆட்சி தொடரப்போவதுமில்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். block_G

Advertisement