தேர்தல் நடத்தை விதி அமல்; ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி
நமது சிறப்பு நிருபர்
தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி இன்று (மார்ச் 15) அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதன்படி ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே பொதுமக்கள் பணம் கையில் எடுத்துச் செல்ல முடியும். அதற்கு மேல் பணம் கொண்டு செல்வோர், உரிய ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய, ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதியை இன்று இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அரசியல் கட்சிகளுக்கான நடத்தை விதிகளும் நடைமுறைக்கு வந்தன.
*பொது இடங்கள் மற்றும் அரசு சுவர்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
* தேர்தல் விதி மீறல்களை கண்காணிக்க பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் பணியை தொடங்கி உள்ளன.
* உரிய ஆவணங்கள் இன்றி பெரிய தொகையை எடுத்துச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
* ஆளும் கட்சி அரசு இயந்திரத்தையோ, வாகனங்களையோ, அதிகாரிகளையோ சொந்தப் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது.
* வழிபாட்டுத் தலங்களைப் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக்கூடாது. சாதி, மதம், மொழி அடிப்படையில் ஓட்டுக்களை கேட்கக் கூடாது .
* வாக்காளர்களுக்குப் பணமோ, பரிசுப் பொருட்களோ கொடுப்பது, மற்றும் ஓட்டுக்களுக்கு விலை பேசுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
* ஓட்டுப்பதிவு முடிவதற்கு 48 மணி நேரத்திற்கு முன், பொதுக் கூட்டங்கள் மற்றும் பிரசாரங்கள் செய்யக்கூடாது.
* தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், ஆவணங்கள் இன்றி அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்து செல்ல அனுமதி உண்டு. அதற்கு மேல், அதாவது 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கொண்டு சென்றால், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இல்லையெனில், தேர்தல் பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்படும்.
தேர்தல் நடத்தை விதிகள் என்பது தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய இந்த தேர்தல் கமிஷனால் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த விதிகள், அரசு அதிகாரம், பொதுப்பணத்தைப் பயன்படுத்தி பிரசாரம் செய்வதைத் தடுத்தல், வாக்காளர்களை அச்சுறுத்துதல், சாதி, மத ரீதியான வெறுப்புப் பிரசாரம், மற்றும் தேர்தல் கமிஷனின் அனுமதி இல்லாமல் புதிய திட்டங்கள் அறிவிப்பதை தடுப்பதற்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
@block_B@
சீல் வைப்பு
இன்று தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், அமைச்சர் மெய்யநாதன் எம்எல்ஏ தொகுதி அலுவலகம் சீல் வைக்கப்பட்டது block_B
இது பாஜக வின் புரிந்துணர்வுக் கூட்டணிக் கட்சிக்கு பொருந்தாது.
அந்த 200 கோடி கண்டைனர் வேலூர் ல பிடிச்சாங்களே ஞாபகம் இருக்கா?
ஏற்கனவே கட்சிகள் உரிய இடத்தில் . சேத்தாச்சு
இத ல பாதிக்கபடுவது
......
ஒரு அரசியல் கட்சியின் பணமும் பிடிப்பட்டாதக வரலாறு இல்லை
அப்பாவிகள் பணத்தை பிடித்து விட்டு செய்தியாக வரும்
My opposite house is a political party sympathiser. last night she gave this to my watch man and told to give me. i came to know today morning. i went to their house returned it to them and told them not to insult me. i told my hands legs brain mind are all healthy. i told in our street no body is below poverty. i told my vote is not for sale. My humble request not to take accept/ recieve any thing from political parties. its a shamefull act. its a crime. its a mockery on us
My vote is my choice. My vote is not for sale. My vote cannot be purchased
Vaazhga Tamizhagam. Jai Hind
ஹூம். நாங்க பாக்காத கட்டுப்பாடா? சாதி மத வெறுப்புப் பிரச்சாரத்தை பிரச்சாரமாக செஞ்சா தானா? சாதி மதம் சாதி மதம் என்ற வார்த்தைகளை வழக்கம் போல் இல்லாமல் நாங்க அதுக்கு அப்பாற்பட்டவங்கன்னு சொல்ற சாக்குல இழுத்தூக்கிட்டே இருப்போம்மாற்று கட்சியினர் எல்லாம் ஜாதி மத வெறியர்கள்னு மக்கள் நினைக்கணும்ங்கறதுக்காக.இதுவும் டயமிங். நாங்க யாரு.....?
இனி 70 சதவீத ஆம்புலன்ஸ் மனிதனுக்கு உபயோகம் இருக்காது. பணத்தை உயிரை காக்க பயன் படும்.
கோயில்களில் தான் கண்காணிப்பானுங்க. மசூதியில் மற்றும் தேவாலயங்களில் கண்காணிப்பானுங்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.
படிக்க வேண்டுமென்றால் நன்றாக இருக்கிறது ஆனால் விதிகளுக்கு எதிராக தான் எல்லாமே நடக்கின்றன. உதாரணத்திற்க்கு மதம் பார்த்து ஓட்டு கேட்க கூடாது.
இனிமேல யாரும் பணம் கொண்டு போகவே மாட்டாங்க. தலைமேல கலகத்துலேந்து போனமாசமே பணம் கட்டு கட்டா அந்தந்த மாவாட்டற செயலாளர்களுக்கு போயி சேர்ந்திருக்கும்.மேலும்
-
தேர்தல் அறிவிப்புக்கு முன் மம்தா வெளியிட்ட அறிவிப்பு; பாஜ விமர்சனம்
-
தேர்தல் அறிவிப்பு எதிரொலி; தலைமைச் செயலகத்தில் முதல்வர் படங்கள் அகற்றம்
-
அழுத்தத்துக்கு அடிபணிந்தால் விஜய் அரசியல் எதிர்காலம் சூனியமாகும்; திருமாவளவன்
-
மே.வங்கத்தில் இம்முறை ஏன் 2 கட்டங்களாக ஓட்டுப்பதிவு; தேர்தல் கமிஷன் விளக்கம்
-
ஸ்ரீ மஹா பெரியவா விருது
-
2021 தேர்தலை காட்டிலும் 17 நாள் தள்ளிப்போனது தமிழக தேர்தல்!