காங். வேதனையை கூட்டணியினர் புரிந்து கொள்ள வேண்டும்; சொல்கிறார் செல்வப்பெருந்தகை
சென்னை: சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிடும் காங். வேதனையை கூட்டணி கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செல்வப்பெருந்தகையிடம் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக மா. கம்யூ மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது செல்வப்பெருந்தகை பேசியதாவது;
ஒரு தேசிய கட்சியான காங்கிரசுக்கு 63 தொகுதிகள் கொடுத்தனர். 63ல் இருந்து அடுத்த தேர்தலில் 41 என ஆக்கினர். அடுத்த தேர்தலில் 25 என ஆக்கினார்கள். எங்களின் தலைமை 41 தொகுதிகள் கேட்டது. ஆனால், இதையே மண்ணை காப்பாற்றுவதற்காக, தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக குறைத்து கொடுத்திருக்கிறார்கள். 3 தொகுதிகளில் கூடுதலாக கொடுத்திருக்கிறார்கள், நாங்கள் வாங்கி இருக்கிறோம்.
ஆனால், எதற்காக இது? ஒரு மனநிறைவோடு வாங்கியிருக்கோமா என்றால்,மனநிறைவோடு வாங்கி இருக்கிறோம். தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வாங்கி இருக்கிறோம். இதில் காங்கிரசை சுட்டிக்காட்டினால் எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.
எங்களின் தோழமை கட்சியினருக்கு அன்போடு, பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். உங்களின் உரிமைகளை கேளுங்கள், அதற்காக காங்கிரசை சச்சரவுக்கு ஆளாக்காதீர்கள். முதல்வருக்கு மனம் இருக்கிறது, இருந்தால் கொடுப்பார். காங்கிரசுக்கு ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்கும் தோழமை கட்சிகள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். 110 தொகுதிகளில் நின்றோம், பிறகு 63, பிறகு 41, பிறகு 25. இதை எல்லாம் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த கூட்டணியை விட்டால்,இந்த மண்ணை காப்பதற்கும், தேசத்தை, தமிழக மக்களை காப்பதற்கும் எந்த கூட்டணியும் கிடையாது. இந்த கூட்டணியில் தான் இருக்க வேண்டும், காலத்தின் கட்டாயம்.
இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.
ஹலோ பெருந்தொகை ஒண்ணுமே செய்யாத உங்களுக்கு 28 ஆனால் 24 மணி நேரமும் முட்டு கொடுத்து பாது காத்த கம்யூனிஸ்டிக்கு கம்மி தப்பு
அண்ணே உங்களுக்கு இருக்கும் செல்வாக்கப் பாத்தா 234 தொகுதிகளிலும் போட்டியிடலாம் அண்ணே...
People should understand Selva Sir is worked so hard by jumping 5 parties to become chief of TN Congress party leader and became MLA from reserved constituency despite of a Christian family . It is really a painful
காங்கிரஸ் கட்சியை வேரோடு தமிழகத்தில் அழிக்க இவரை போன்ற தலைவர்களால் மட்டுமே முடியும்.
சத்தியமூர்த்தி பவன் உதயநிதி மால் ஆகிறது, காங்கிரஸ் அலுவலகம் அறிவாலய கோடௌனில், ஜஸ்ட் 2 மந்த்ஸ் பிரதர்
ஆட்களே இல்லாத கான் கிராஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கும் போது .... களத்தில் இறங்கி வேலை செய்யும் கட்சிகளுக்கு ஏன் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கக் கூடாது என்பது தான் அவர்களின் கேள்வி ....அதிலும் ஒரு நியாயம் இருக்கத் தானே செய்கிறது ?
அதாவது உங்களுக்கும் புரிந்து விட்டது காங்கிரஸ் அவ்வளவு தான் என்று
கழுதை தேய்ந்து கட்ட எறும்பு ஆனதாக செல்வா பெருந்தகையே ஒத்துக்கொண்டதுக்கு மிக்க நன்றி
தமிழ்நாட்டை காத்த லட்சணம் போதும். . ஆம்ஸ்ட்ரோங் கொலை வழக்கில் தமிழகமே சிக்கியிருக்கிறதா ? அப்போ அந்த வழக்கில் சிக்கவைத்தது யாரு ? ரீலிஸ் அறுந்து ரொம்ப நாலாயிடிச்சி பெரும்தொகையாரே.
DESA VIRODHA MAFIA MAINO CONGRESS KUMBALUKKU MIGA PORUTHAMAANA LEADER.மேலும்
-
நடிகர் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை; இபிஎஸ்
-
கண்ணை இமை காப்பது போல சிறுபான்மை மக்களை காப்பது அதிமுக மட்டுமே: இபிஎஸ்
-
சிறுபான்மையினர் மீது வெறுப்பை தூண்டிவிட்டு குளிர்காயும் பாஜ; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
தேர்தல் அறிவிப்புக்கு முன் மம்தா வெளியிட்ட அறிவிப்பு; பாஜ விமர்சனம்
-
தேர்தல் அறிவிப்பு எதிரொலி; தலைமைச் செயலகத்தில் முதல்வர் படங்கள் அகற்றம்
-
அழுத்தத்துக்கு அடிபணிந்தால் விஜய் அரசியல் எதிர்காலம் சூனியமாகும்; திருமாவளவன்