டில்லியில் விசாரணை; நடிகர் விஜய்யிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி
நமது டில்லி நிருபர்
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக, இன்று (மார்ச் 15) 3வது முறையாக டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் ஆஜரானார். அவரிடம் பல்வேறு வீடியோ ஆதாரங்களை காண்பித்து சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூரில் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில், 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இது தொடர்பான விசாரணைக்கு, சென்னையில் இருந்து டில்லிக்கு தனி விமானம் மூலம் வந்தார். அவருடன் த.வெ.க., நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ஜெகதீஷ் உள்ளிட்ட, ஏழு பேர் வந்தனர்.
வீடியோவை காண்பித்து விசாரணை
இந்நிலையில் இன்று (மார்ச் 15) காலை 10.20 மணியளவில் டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு விஜய் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தயார் செய்து வைத்து இருந்த பல்வேறு கேள்விகளை எழுப்பினர். கரூரில் விசாரணை நடத்திய நபர்களிடம் பெறப்பட்ட வீடியோ வாக்குமூலம், கைப்பற்றப்பட்ட வீடியோ ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விஜய்யிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவற்றுக்கு விஜய் பதில் அளித்து வருகிறார்.
அனுமதியில்லை
கடந்த முறை விசாரணையை போலவே சிபிஐ அலுவலக போர்டிகோ வரை காரில் விஜய் சென்றார். அப்பகுதியில் விஜயை புகைப்படம் எடுப்பற்கு செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர வாய்ப்பு
இந்த வழக்கு தொடர்பாக, ஏற்கனவே இரு நாட்கள், டில்லியில் விஜயிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தியுள்ளது. மூன்றாவது முறையாக இன்றும், அவரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை, நாளையும் நடக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. விசாரணை தொடர்ந்தால் இன்றும் விஜய் டில்லி ஹோட்டலில் தங்க வேண்டியிருக்கும்.
சிபிஐ அலுவலகம் விஜய்உடன் பேச்சு வார்த்தை நடத்த BACK DOOR வழியே பீசப்பி தலைவர் விஜயம்
இவர் செய்த மிகப்பெரிய தவறு தமிழக போலீஸ் தரப்பிடம் கரூர் வழக்கு விசாரணையை விடாமல் மத்திய அரசின் சிபிஐ விசாரணை நாடியது தான் இப்பொழுது தவளை வாயிலிருந்து தப்பித்து முதலை வாயில் மாட்டிக்கொண்ட கதை தான்... ஐயோ பாவம் என்று தான் தோணுகிறது
விஜய் ஒரு 3 பக்க அறிக்கை பாயிண்ட் பாயிண்ட் ஆக தயார் செய்து, 2ம் பக்கம் பார்க்க, 3ம் பக்கம் பார்க்க என்று பதில் அளித்தால் போதும். கருத்துகள் முன் பின் irukkadhu
சில பேர் நம்மலோடு சேர வரலாம் இல்லையா என்று சொல்லிவிட்டு , இவர் NDA ஏ வில் சேர டெல்லி ஓடி இருக்கிறார், ஆக்டோபஸ் வலையில் வீழ்ந்து விட்டார் , இப்ப பாயசம் சாப்பிட போகிறார்
கூட்டணியில் சேரும் வரை விசாரணை தொடருமா?
visaaranai plus jananaayakan release !மேலும்
-
தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமல்; ரொக்கப்பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடு
-
தமிழகத்தில் ஏப்ரல் 23ல் ஒரே கட்டத் தேர்தல்!
-
காங். வேதனையை கூட்டணியினர் புரிந்து கொள்ள வேண்டும்; சொல்கிறார் செல்வப்பெருந்தகை
-
5 ஆண்டில் 1.55 லட்சம் பேருக்கு அரசுப் பணி; முதல்வர் ஸ்டாலின்
-
நேபாளத்தில் பஸ் கவிழ்ந்தது; தமிழக பக்தர்கள் பலி
-
கோவையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி கைது