தனியார் ரயில்வே தடங்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை; அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை: தனியார் ரயில்வே தடங்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
கரூர் மாவட்டம், க.பரமத்தியில், வி.எஸ்.பி., பொறியியல் கல்லுாரி பஸ் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில், 24 பேர் காயமடைந்தனர். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம் ஜல்லிப்பட்டி அருகே, தனியார் ஆளில்லா ரயில்வே கிராசிங்கில், கல்லூரி பஸ் மீது சரக்கு ரயில் மோதிய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
விபத்தில் காயமடைந்த மாணவ, மாணவியர்கள் அபாயகட்டத்தில் இருந்து வெளிவந்து விட்டார்கள் என்ற செய்தி மனநிம்மதி அளிக்கிறது. அவர்கள் அனைவரும் விரைவில் பூரண நலம்பெற, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
இது போன்ற நிகழ்வுகள் மிகவும் துரதிருஷ்டவசமானது. மேலும் இது போன்ற நிகழ்வுகள் எங்கும் ஏற்படாமல் தடுக்க, தனியார் ரயில்வே தடங்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
விபத்து குறித்த செய்தி அறிந்ததும் உதவிய பொதுமக்களுக்கும், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று, மாணவ மாணவியரைச் சந்தித்து, ஆறுதல் கூறிய, தமிழக பாஜ கரூர் மாவட்ட நிர்வாகிகளுக்கும், எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
பெரும்பாலான சிமெண்ட் ஆலைகள் தங்கள் சுரங்கங்களில் இருந்து கனிமம் கொண்டு வர பிரத்யேக ரயில் தடங்கள் ரோலிங் ஸ்டாக் வைத்துள்ளன.. அந்த ரயில்கள் மிகவும் நிதானமாக வேகமின்றி இயங்குபவை...சில நூறு/ ஆயிரம் டன்கள் எடையுள்ள கனிமத்தை கொண்டு வரும் ரயிலை உடனடியாக நிறுத்த முடியாது..தடம் புரளும் வாய்ப்பு அதிகம் உள்ளது... அவர்கள் வழித்தடம் முழுமைக்கும் ஆளுள்ள பாதைக்கடவுகள் அமைக்கவும் இயலாது..இவை அதிகபட்சம் மீட்டர் கேஜே விட குறைந்த பாதை அகலம் கொண்டவை....லெவல் கிராசிங் எதுவாக இருந்தாலும் கடக்கும் சாலை போக்குவரத்து வண்டி ஓட்டுநர்கள் வண்டியை நிறுத்தி இறங்கி பார்த்தபின்பே இயக்க வேண்டும் என்பது விதி.. சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர் பஸ் சிக்கியவுடன் அனைவரையும் இறங்கி இரயில் பாதையை கடந்து மறுபுறம் போகச் செய்தபின் வண்டியை நகர்த்த முயற்சி செய்திருக்க வேண்டும்.. தற்சமயம் எந்த பயணியாக இருந்தாலும் தான் பயணிக்கும் வண்டி எங்கு போய்க்கொண்டிருக்கிறது, சுற்றிலும் என்ன இருக்கிறது என்று சிந்தனை இன்றி மொபைல் போன்களில் மூழ்கி விடுவது விபத்துக்களில் சேதத்தை அதிகரிக்கிறது...கடவுகளில் சைரன் இன்றி எந்த ரயிலும் இயக்கப்படுவதில்லை...தவறு பஸ் டிரைவர்/ மாணவர்கள் மீதுதான்...மேலும்
-
தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமல்; ரொக்கப்பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடு
-
தமிழகத்தில் ஏப்ரல் 23ல் ஒரே கட்டத் தேர்தல்!
-
காங். வேதனையை கூட்டணியினர் புரிந்து கொள்ள வேண்டும்; சொல்கிறார் செல்வப்பெருந்தகை
-
5 ஆண்டில் 1.55 லட்சம் பேருக்கு அரசுப் பணி; முதல்வர் ஸ்டாலின்
-
நேபாளத்தில் பஸ் கவிழ்ந்தது; தமிழக பக்தர்கள் பலி
-
கோவையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி கைது