திருவிதாங்கூர் அரண்மனையில் ரூ.2 கோடி தங்க நகைகள் திருட்டு
திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் மன்னர் அரண்மனையில், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதியை சுதந்திரத்துக்கு முன் திருவிதாங்கூர் அரசக் குடும்பத்தினர் ஆட்சி செய்தனர். இவர்களது அதிகாரப்பூர்வ இல்லமாக இருப்பது திருவனந்தபுரத்தில் உள்ள கவுடியார் அரண்மனை.
இந்த அரண்மனையில், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் அஸ்வதி திருநாள் கவுரிபாய் புகார் அளித்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: என் படுக்கை அறையில் உள்ள அலமாரியில் இருந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், 12 நகைகள் திருடு போயுள்ளன. இதில், தங்க சங்கிலிகள் மற்றும் கல் பதிக்கப்பட்ட மோதிரங்கள் என, 40 சவரன் நகைகள் கொள்ளை போயுள்ளன. இவற்றின் மதிப்பு, 2 கோடி ரூபாய். திருடு போன நகைகளை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புராதான நகைகளை திருடி விற்கும் கும்பல் அங்கும் கைவரிசையை காட்டியிருப்பது துரதிஷ்ட வசமானது.
யோவ் சொன்ன நம்புய்யா. இதுக்கும், அப்பா குடும்பத்துக்கும் சம்பந்தம் இல்லைய்யா.மேலும்
-
டிரம்ப் சொல்வதை எந்த நாடும் கேட்கவில்லை!
-
எம்ஜிஆர், ஜெயலலிதா நன்மதிப்பை பெற்ற ரஜினி மீது அவதூறு; ஆதவ் பெயரை சொல்லாமல் கண்டித்த இபிஎஸ்
-
தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை; தேர்தல் கமிஷன் அறிவிப்பு
-
ஈரானின் டான்சிங் ஏவுகணை; முதல்முறையாக இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல்
-
செங்கோட்டை- மயிலாடுதுறை ரயிலில் கிடந்த 12 சவரன் நகை, லேப்டாப்: உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்
-
சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க பயணத்தை ஒத்தி வைத்தார் டிரம்ப்