விஷ ஊசி செலுத்தி 100 நாய்கள் கொலை; தெலுங்கானாவில் மீண்டும் கொடூரம்
ஹைதராபாத்: தெலுங்கானாவில், விஷ ஊசி செலுத்தி 100 தெருநாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள காமரெட்டி மாவட்டத்தில், கடந்த ஜனவரியில் ஒரே வாரத்தில், 200 தெருநாய்கள் விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்டன. இதே போல, பல்வேறு மாவட்டங்களிலும், 500க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்டன.
போலீசில் புகார்
இந்நிலையில், இது போன்ற சம்பவம் மீண்டும் அரங்கேறி உள்ளது. மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள கிஷ்டாப்பூர் கிராமத்தில், கடந்த 7ம் தேதி நள்ளிரவில், 100க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்ட நிலையில், அவற்றின் உடல்கள் ஆற்றங்கரையோரம் கண்டெடுக்கப்பட்டன.
இது குறித்து, கிஷ்டாப்பூர் கிராம பஞ்சாயத்து தலைவர், செயலர் ஆகியோர் மீது, விலங்குகள் நல ஆர்வலர் கவுதம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதில், 'தெருநாய்களை கொல்ல கிஷ்டாப்பூர் கிராம பஞ்சாயத்து தலைவர், செயலர் ஆகியோர் இரு நபர்களை வாடகைக்கு அமர்த்தி உள்ளனர். அவர்கள் நாய்களுக்கு விஷ ஊசிகளை செலுத்தி கொன்று, பின், உடல்களை ஆற்றங்கரையோரம் புதைத்துள்ளனர்' என, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதிர்ச்சி
இதன்படி, விலங்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர், செயலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மூன்று மாதங்களில் தெருநாய்கள் அடுத்தடுத்து விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்வது தெலுங்கானா மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
@block_B@
'தெலுங்கானாவில், கடந்த சில மாதங்களாக 1,000க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கொல்லப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த கிராம பஞ்சாயத்து தேர்தலில், தெருநாய்கள் மற்றும் குரங்குகளின் தொல்லையை ஒழிப்பதாக வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்தனர். வெற்றி பெற்றவர்கள், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவே, சட்ட விரோதமாக ஆட்களை பணியமர்த்தி தெருநாய்களை கொலை செய்வதாக சந்தேகிக்கப்படுகிறது' என, சம்பவம் நடந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.block_B
தெரு நாய் கொடுமையால் அன்றாடம் பாதிக்கப்படும் நிலையில் நாட்டின் ஜனநாயக தூண்கள் பாராமுகம் காட்டும் போது மக்கள் கொதிப்பு வெளிப்படத்தானே செய்யும்.
ஓம் நமசிவாய. மனிதனே கவலைப்படாதே. கொடூரமான மனித இனத்திற்கு எதிராக கர்மாவின் பழிவாங்கல் ஏற்கனவே தொடங்கிவிட்டது. தீவிர வன்முறை சிந்தனையால் மனித இனம் ஏற்கனவே அழியத் தொடங்கிவிட்டது. இயற்கை விரைவில் இந்த கிரகத்திலிருந்து மனிதர்கள் என்ற பயனற்ற உயிரினத்தை முடிவுக்குக் கொண்டுவரும். பின்னர் மற்ற அனைத்து உயிரினங்களும் இந்த மனிதரற்ற அழகான கிரகத்தில் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழும். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி
தவறில்லை!
குணப்படுத்த முடியாத ரேபிஸ் ரேபிஸ் மனிதனை கொல்வது இந்த விலங்கு ஆர்வலர்களுக்கு தெரியாதா.
இது தொடர வேண்டும்.
மக்கள் பாதுகாபே முக்கியம் ,
ஆமா அவர் செய்தது தவறுதான்... நாய் கடித்து இறக்கும் குழந்தைகளை புதைக்கலாம்... நாய் கடித்து ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கொல்லலாம்... ஆனால் நாய்களைக் கொன்றால் அது மாபெரும் குற்றம்.
தாராளமாக இனப்பெருக்கம் செய்யவிட்டு அதன் பின் மனிதனின் உற்ற நண்பனை கொலை செய்வது கொடூரம்.
உற்ற நண்பன் என்றால் வீட்டுக்குள் ஒரு நாலைந்து நாலுகால் நண்பர்களை வைத்து வளர்க்க வேண்டியது தானே? அதை செய்யமாட்டேமேலும்
-
ஆட்சி மாற்றத்திற்கு பின் விளாத்திகுளம் மாணவி விவகாரத்தில் உரிய நீதி; நயினார் நாகேந்திரன்
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் வழக்கு; ஏப்ரல் 9க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைப்பு
-
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிய கோரி ஐகோர்ட்டில் திமுக மனு
-
அவை நடைமுறை விதிகளை மறுஆய்வு செய்யுங்கள்; ராஜ்யசபாவில் கார்கே வலியுறுத்தல்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!