விஜயை கூட்டணிக்கு அழைத்த பா.ஜ.,: மவுனம் காப்பதால் கட்சியில் குழப்பம்
- நமது நிருபர் -
'தனித்து நின்று, தி.மு.க., வெற்றிக்கு உதவப் போகிறீர்களா அல்லது தே.ஜ., கூட்டணியில் இணைந்து அவர்களை வீழ்த்த போகிறீர்களா' என விஜயிடம் டில்லி முக்கியஸ்தர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதில் அளிக்க முடியாமல் விஜய் மவுனமாகி உள்ளார்.
இது தொடர்பாக த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: த.வெ.க., தனித்து நின்றாலே, 25 சதவீத ஓட்டுகளை பெறும். தேர்தல் நெருக்கத்தில் விஜய் பிரசாரத்தை தீவிரப்படுத்தினால் ஓட்டு சதவீதம் கூடும். இது, தே.ஜ., கூட்டணிக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அதனால்தான், கரூர் சி.பி.ஐ., வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்ட விஜயை, மீண்டும் விசாரணைக்காக டில்லிக்கு வரவழைத்தனர்.
விஜயுடன் டில்லி சென்ற த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, விஜயின் நண்பர் விஷ்ணு ரெட்டி ஆகியோர், பா.ஜ.,வைச் சேர்ந்த டில்லி முக்கியஸ்தர்களை, டில்லி கோல்ப் கிளப் அருகே, 14ம் தேதி இரவு சந்தித்து பேசினர்.
அப்போது, 'விஜய் அரசியலுக்கு வரவில்லையென்றால், தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை ஒருங்கிணைத்து, கூட்டணி பலத்தால் தே.ஜ., கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஆனால், த.வெ.க., வருகையால் எல்லாம் மாறிவிட்டது. த.வெ.க., தனித்து போட்டியிட்டால், தி.மு.க., எளிதாக வென்றுவிடும். அதைதான் விஜய் விரும்புகிறாரா. தி.மு.க.,வை வீழ்த்த, தே.ஜ., கூட்டணிக்கு விஜய் வரவேண்டும். கரூர் வழக்கில் கூட, இன்றுவரை பா.ஜ., தான் உதவி வருகிறது.
தே.ஜ., கூட்டணியில் இணைந்தால், விஜயின் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என, தி.மு.க., தான் பிரசாரம் செய்கிறது. உண்மை அதுவல்ல. ஆரம்பத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் இப்படி யோசித்தே, கூட்டணியை தவிர்த்தார். உண்மையை அறிந்தபின், கூட்டணிக்குள் வந்து துணை முதல்வராகி விட்டார்.
த.வெ.க.,வுக்கு ஆதரவாக போலியான சர்வேக்களை தி.மு.க., தரப்பு வெளியிடுகிறது. அவர்கள் உருவாக்கும் மாயையில் வீழ்ந்தால், விஜய்க்கு தான் பாதிப்பு. தனித்து போட்டியிடுவது தற்கொலைக்கு சமம். தே.ஜ., கூட்டணியில் இணைந்தால் வெற்றி நிச்சயம். இதை விஜயிடம் விளக்கி சொல்லுங்கள்' என, டில்லி பா.ஜ., முக்கியஸ்தர்கள் கூறி உள்ளனர்.
இதை, இருவரும் விஜயிடம் கூறியுள்ளனர். ஆனால், அவர் எந்த முடிவும் எடுக்காமல் மவுனம் காக்கிறார். அவரின் மவுனம், கட்சியை உச்சக்கட்ட குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
@block_B@
டில்லி சி.பி.ஐ., அலுவலகத்தில், நேற்று காலை 10:30 மணிக்கு விஜய் ஆஜரானார். அவரிடம் மூன்று அதிகாரிகள், ஏழு மணி நேரம் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முதல்நாள் விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகள் பலவும் மீண்டும் கேட்கப்பட்டு, விஜயின் உறுதித்தன்மை பரிசோதிக்கப்பட்டுள்ளது.
கூடவே, கரூர் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பின்புலம் இருப்பதாக சந்தேகிக்கிறேன் என இம்முறையும் விஜய் கூற, அதை சி.பி.ஐ., அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். அதற்கான விசாரணைக்காகத்தான், அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி, வரும் 17ல் ஆஜராவார். அப்போது, அவரிடமும் தீவிர விசாரணை நடக்கும் என விஜயிடம் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இதற்கிடையில், த.வெ.க., வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியை டில்லிக்கு வரவழைத்து விசாரிக்க சி.பி.ஐ., முடிவெடுத்திருக்கிறது. 'விரைவில் அவருக்கு சம்மன் அனுப்பப்படும்' என, சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.block_B
மாவு மிசின் சத்தம் ஓவரா கேட்குது.
பாஜகவுடன் விஜய் கூட்டணி வைத்தால் திமுகாவை வீழ்த்துவது சாத்தியம். இல்லையேல் தனித்து நின்று தோல்வியடைந்து திமுக வெற்றி பெற்றால், தவெக காணாமல் போவது உறுதி.
தளபதி சும்மா தொளபதி அக வேண்டியது தான் சால சிறந்தது
சிபிஐ விசாரணைக்கு என்று அழைத்து தேர்தல் கூட்டணிக்கு வர்றியா என்று கூப்பிட வைத்து இப்படி ஒரு குற்றவியல் அமலாக்க அமைப்பை அரசியல் அடியாளக மாற்றிய பாஜக. இவனுங்க தான் நாட்டை திருந்த போறாங்க
கொள்கை எதிரிகள் வெட்கம் இல்லாமல் ஒன்று சேர்ந்து கொண்டு மக்களை ஏமாற்றி பதவி சுகம் காண மக்கள் வாக்களிக்க வேண்டு மா ? டி எம் கே ஏ டி எம் கே பி ஜே பி எல்லாம் ஒரே குட்டையில் இருக்கும் கொடூர முதலைகள்.
234 தொகுதிக்கும் விஜய்க்கு வேட்பாளர்கள் கிடைப்பார்கள்.. ஆனால் வெற்றி பெறுவார்களா என்பது சந்தேகம் தானே.. தெளிவாக சிந்தித்தால் துணை முதல்வர் அல்லது எதிர்க்கட்சி தலைவர் ஆகலாம்.. திமுகவையே முந்துவது எளிது..
இணைமுதல்வர், துணைமுதல்வர் இல்லேன்னா முதல்வருக்கு எடுபிடி பதவி குடுப்பாங்க. தளபதி ஒத்துப்பாரா?
கூட்டணி என்று கூற கூச்சமென்றால் தொகுதி உடன்பாடு என் கூறி சரியாக தேர்தலை சந்திக்கலாம்.மேலும்
-
ஒடிசாவில் சோகம்; மருத்துவமனையில் தீ பற்றியதில் நோயாளிகள் 10 பேர் பலி
-
துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது ஈரான் தாக்குதல்
-
இன்று இனிதாக... (16.03.2026) சிவகங்கை
-
சென்னையில் போலீஸ் என்கவுன்டர்: ரவுடி சுட்டுக் கொலை
-
பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு; கோவையில் போலீஸ் அதிகாரி கைது
-
ரூ.2 கோடி முறைகேடு; திமுக பெண் சேர்மன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு