அர்ச்சகர்களுக்கு ஊதிய உயர்வு கடைசி நேரத்தில் அறிவித்தார் மம்தா
கொல்கட்டா: சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், அர்ச்சகர்களுக்கு கவுரவ ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்கப்படும் போன்ற அதிரடி அறிவிப்பு களை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 294 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதன்படி, 152 தொகுதிகளுக்கு ஏப்., 23லும், 142 தொகுதிகளுக்கு ஏப்., 29லும் தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மே 4ல் நடக்கிறது.
இது தொடர்பான கால அட்டவணையை, தேர்தல் கமிஷன் நேற்று மாலை 4:00 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்திருந்தது. இதற்கு சில மணி நேரங்களுக்கு முன், முதல்வர் மம்தா பானர்ஜி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:
மேற்கு வங்கத்தில் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் மசூதிகளில் பணிபுரியும் இமாம்களின் மாதாந்திர கவுரவ ஊதியம், 500 ரூபாய் அதிகரிக்கப்படுகிறது.
இதன் மூலம் அவர்கள் இனி மாதம், 2,000 ரூபாய் பெறுவர். கவுரவ ஊதியம் வேண்டி விண்ணப்பித்த அர்ச்சகர்கள் மற்றும் இமாம்களின் அனைத்து புதிய விண்ணப்பங்களுக்கும் உடனடியாக ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அகவிலைப்படி நிலுவை
அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்கக் கோரி, மேற்கு வங்க அரசு ஊழியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வரும் 31க்குள் அகவிலைப்படி நிலுவைத் தொகையில், 25 சதவீதத்தை வழங்க உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில், அகவிலைப்படி நிலுவைத்தொகை இம்மாதம் முதல் வழங்கப்படும் என, முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று அறிவித்துள்ளார்.
விதிமீறல் இல்லை
இதன் மூலம், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் தொழிலாளர்கள் பயனடைவர் என, மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால், அதற்கு முன்பாகவே, அர்ச்சகர்களுக்கு கவுரவ ஊதிய உயர்வு, அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்கப்படும் போன்ற அறிவிப்புகளை முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்டார். இது, தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை என, தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.
வங்கதேசத்தில் இனப் படுகொலை செய்யப்படும் ஹிந்துக்களுக்கு இவர் அனுதாபப்படவில்லை. அங்குள்ள பூசாரிகள் தாக்கப்பட்டதை கண்டிக்கவில்லை. இங்கு நாடகமாடுகிறார்.
இழி பிறவி
நாலேமுக்கால் வருசமா ஹிந்துக்களுக்கு ஆப்படித்துவிட்டு தேர்தல் வரும்போது கிட்னி திருட்டுக்கழகம் கையில வேல் ஏந்துதே ..... அதுமாதிரிதானுங்க இதுவும் .....
உங்க குருமார்களுக்கு கொடுக்க விரும்பினார்.. அவர்களுக்கு மட்டும் கொடுத்தால் சர்ச்சை எழும் .... ஆகவே ஹிந்து அர்ச்சகர்களுக்கும் கொடுத்தார் அம்மையார் .....
நாதாரிகளுக்கு ஓட்டுப்போடும் சில ஜனங்கள்தான் கொடியவர்கள்
என்ன ஒரு அசிங்கம்... தமிழக அர்ச்சகர்கள் மட்டும் பாவம் செய்தவர்கள் போல.. இந்த முறையாவது அர்ச்சகர்கள் தீம்க்காவுக்கு ஓட்டுப்போடாமல் இருக்கவேண்டும்.
இவ்ளோ வருடங்களாக 15 வருடங்கள் தூங்கி கொண்டு இருந்தார். தேர்தல் அறிவிப்பு வெளியாகும் சில மணி நேரம் முன்பு இந்த அறிவிப்பு. கேட்டால் வங்கம் எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆஃப் control அப்டின்னு உருட்டுவாங்க. வங்காள அசிங்கம்மேலும்
-
குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி
-
ஹோட்டலில் ஜூஸ் வாங்கியவரிடம் எரிவாயுவுக்கும் கட்டணம் வசூல்
-
தேனியில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் திறப்பு விழா நடிகர் ரவிமோகன் பங்கேற்பு
-
குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர்
-
கணவரை விடுவிக்கும்படி வேண்டிய பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்திய இன்ஸ்பெக்டர்
-
போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞருக்கு விநோத தண்டனை