ரூ.2 கோடி முறைகேடு; திமுக பெண் சேர்மன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு
தஞ்சாவூர்: பேராவூரணி பேரூராட்சியில், டெண்டரில் முறைகேடு செய்த தி.மு.க., சேர்மன், அவரது கணவர் உட்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி, 41; தி.மு.க.,வை சேர்ந்தவர். அவரது கணவர் சேகர், 45; தி.மு.க., பேரூர் கழக செயலர். சாந்தியின் மாமனார் செல்வராஜ், 60. இவர்கள் பெயரில், பேரூராட்சி பணிகளை டெண்டர் எடுத்து, முறைகேடுகளில் ஈடு பட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, தி.மு.க., பிரமுகரான ஒப்பந்ததாரர் செந்தில்குமார், 2025ல் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி, ஆய்வு நடத்திய அதிகாரிகள், 2 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்திருப்பதை உறுதி செய்தனர்.
இருப்பினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், நீலகண்டன் என்பவர், லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் மனு அளித்ததோடு, நீதிமன்றத்திலும் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
நீதிமன்றத்தின் உத்தரவின்படி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மார்ச், 11ல் அய்யம்பேட்டையில், தற்போது பணியாற்றும் முன்னாள் பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல், 53, சாந்தி, சேகர், செல்வராஜ், பேரூராட்சி முன்னாள் இளநிலை பொறியாளரும், தற்போது திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் பணியாற்றும் தாமஸ் ஆனந்த், 50, பேரூராட்சியின் தற்காலிக கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் ஜமுனாராணி, 44, நீலகண்டன், 44, ஆகியோர் மீது, 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவங்கி உள்ளனர்.
வாசகர் கருத்து (24)
பைரவன் - ,
16 மார்,2026 - 18:32 Report Abuse
முறைகேடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்புறம் என்ன விசாரணை? மேலிடத்துக்கு பங்கை ஒழுங்கா கொடுக்கவில்லை போல. 0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
16 மார்,2026 - 16:59 Report Abuse
இப்படிப்பட்ட சாந்திக்களால்தான் திமுகவின் பெயரே ரிப்பேர் ஆகிறது. உடனடியாக தலை மேல் கலகம் தலையிட்டு இவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆயிரம் கோடிகளை சர்வ சாதாரணமாக கொள்ளையடிக்கும் நேருக்கள் இருக்கும் கட்சியில் கேவலம் வெறும் இரண்டு கோடிக்கு கொள்ளையடிப்பவர்கள் இருந்தால் தி றமையற்றவர்கள் கட்சி என்ற முத்திரை விழுந்துவிடும். அதனால் இவரை உடனடியாக இரண்டு நாட்களாவது கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யவேண்டும். 0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
16 மார்,2026 - 13:21 Report Abuse
வேறு ஏதோ ரகசிய விஷயம் உள்ளது . 0
0
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
16 மார்,2026 - 13:53Report Abuse
ஒன்னும் ரகசியம் இல்லை CAG சொன்ன 76500000 கோடி , ஒரு கிலோமீட்டர் ரோடு போட 290 கோடி இது தான் ரகசியம் 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
16 மார்,2026 - 12:57 Report Abuse
திமுக ஆட்சியில் இப்படி எல்லாம் நடக்காவிட்டால்தான் அது தலைப்பு செய்தி. இதெல்லாம் ஒரு செய்தியே அல்ல. 0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
16 மார்,2026 - 12:11 Report Abuse
ஸ்டாலின் சார் பாதுகாக்கலையா 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
16 மார்,2026 - 12:09 Report Abuse
இனி அமைச்சர் நேரு விஷயத்தில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டதால் FIR போடமுடியவில்லை என லஞ்சம் ஒழிப்பு துறை கோர்ட்டில் பிரமாண பத்திரம் கொடுக்கமுடியாது. 0
0
Reply
krishnaraj - bangalore,இந்தியா
16 மார்,2026 - 11:38 Report Abuse
Both DMK& ADMK are Mega Looters 0
0
Reply
ABDULRAHIM - ,இந்தியா
16 மார்,2026 - 11:27 Report Abuse
பழனி வேல் பெரிய பாக்கெட் 0
0
Reply
V Rajasekaran - Chennai,இந்தியா
16 மார்,2026 - 11:18 Report Abuse
வழக்கு போட்டா செட்டில் ஆயிடும் 0
0
Reply
VASUDEVAN - CHENNAI,இந்தியா
16 மார்,2026 - 11:03 Report Abuse
அரசின் 4000 கோடி கொள்ளைக்கு ஒன்னும் சொல்லla 0
0
Reply
மேலும் 13 கருத்துக்கள்...
மேலும்
-
சிறப்பு பள்ளியில் சான்றிதழ் வழங்கல்
-
தேர்தல் தொடர்பான புகார்கள் மீது 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல்
-
சொத்து விபரம் மறைப்பு பழனிசாமி வழக்கு: ஏப்., 14ல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
-
கார் மோதி மூதாட்டி பலி
-
பிரசார பயணம் குறித்து விஜய் ஆலோசனை
-
கிரைம் செய்திகள்...
Advertisement
Advertisement