பிரசார பயணம் குறித்து விஜய் ஆலோசனை
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம்; புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வு ஆகியவை குறித்து, த.வெ.க., தலைவர் விஜய், தன் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து, த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு, ஏப்.,9ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. வரும் 23ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். எனவே, புதுச்சேரி தேர்தலில், த.வெ.க., சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் 50 பேர், நேற்று சென்னை பனையூர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்களிடம், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் நேர்காணல் நடத்தினார். அப்போது தேர்வு செய்யப்பட்ட 30 பேரிடம், விஜய் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்.
அதன்பின், கட்சியின் மூத்த நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல்குமார் ஆகியோருடன், விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழக தேர்தலில், த.வெ.க., வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்தும், விஜயின் பிரசார சுற்றுப் பயண திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி, நாளை அல்லது வரும் 20ம் தேதி, புதுச்சேரிக்கான த.வெ.க., வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது.
இம்மாதம் வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்திவிட்டு, ஏப்., 7ம் தேதி வரை புதுச்சேரியில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார்.
அப்போதே அண்டை மாவட்டங்களான விழுப்புரம், கடலுாரிலும் பிரசாரம் செய்ய உள்ளார். மொத்தமாக தமிழகம் முழுதும் 25 நாள்கள் பிரசார செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
என்னது பிரச்சார பயணமா? இவனெல்லாம் ஒரு ஜென்மம் என இவனை நம்பி வரும் ஆட்டு மந்தை தருதலைகளில் எவனுக்கு சவக்குழி தோண்ட காத்திருக்கிறானோ தெரியவில்லை நல்ல மனிதர்களுக்கெல்லாம் சீக்கிரம் சாவு வருகிறது ஆனால்........மேலும்
-
குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி
-
ஹோட்டலில் ஜூஸ் வாங்கியவரிடம் எரிவாயுவுக்கும் கட்டணம் வசூல்
-
தேனியில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் திறப்பு விழா நடிகர் ரவிமோகன் பங்கேற்பு
-
குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர்
-
கணவரை விடுவிக்கும்படி வேண்டிய பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்திய இன்ஸ்பெக்டர்
-
போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞருக்கு விநோத தண்டனை