கார் மோதி மூதாட்டி பலி

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சியில் கார் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார்.

பெரியாக்குறிச்சி புது நகரை சேர்ந்த செல்லம்மாள், 70; நேற்று காலை 9:30 மணிக்கு கடலுார் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக சென்ற கார் செல்லம்மாள் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த செல்லம்மாளை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லம்மாள் இறந்தார்.

இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement