மதுக்கரை, கோவைபுதூரில் ஆலங்கட்டி மழை

போத்தனூர்: கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை நேரத்தில் இதமான சூழல் நிலவியது. குறிப்பாக நேற்று முன்தினமும் நேற்றும் காற்று வீசியது. நேற்று மாலை, 3:30 மணி முதல் கருமேகம் திரண்டு, பலத்த இடி இடித்தது.


தொடர்ந்து, 4:00 மணியளவில் துவங்கிய மழை சுமார் 40 நிமிடங்கள் பெய்தது. மதுக்கரை, கோவைபுதூர், அறிவொளி நகர், அண்ணா நகர் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. மக்கள் இத்திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement