பல நாடுகளால் வாங்கப்படும் தேர் அலங்கார பொருட்கள்!
மதுரை, தெற்குவெளி வீதியில், 'அரசவேல் கைவினை தொழிலகம்' என்ற பெயரில், கோவில் தேர்களுக்கான அலங்கார பொருட்களை தயாரிக்கும் அரவிந்த்: தேர் அலங்காரம் என்பது, மதுரையின் தனித்துவமான, பாரம்பரிய தொழில். மீனாட்சி அம்மன் கோவிலுக்காக, இந்த அலங்கார பொருட்களை பாண்டியர் காலத்தில் இருந்தே எங்கள் முன்னோர் செய்து வந்திருக்கின்றனர்.
அந்த பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே, இன்றும் அச்சடிக்கும் முறை களை பயன்படுத்தாமல், கையால் வரையும் முறையையே தொடர்ந்து பின்பற்றுகிறோம்.
நான், இயந்திர பொறியியல் படிப்பு முடித்திருக்கிறேன். ஆனால், சிறு வயது முதலே, அப்பாவுடன் இணைந்து வரையும் தொழிலை ஆர்வத் துடன் கற்றுக் கொண்டேன்.
இந்த தொழிலில் நான் ஈடுபட ஆரம்பித்து, 24 ஆண்டுகள் ஆகின்றன. என் குருநாதர் என் அப்பா தான். இப்போது, குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து இந்த தொழிலை செய்து வருகிறோம்; எங்களிடம், 10 பேர் வேலை செய்கின்றனர்.
சுவாமி ஊர்வலத்தில் பயன்படுத்தப்படும் குடைகள், தேர் சீலைகள், பாரம்பரிய வடிவங்களுடன் கட்டப் படும் மாலைகள், சுவாமி கிரீடங்கள் , சன்னிதியில் கட்டப் படும் திரைகள் போன்றவற்றையும் தயார் செய்கிறோம்.
கடந்த 2021 சித்திரை திருவிழாவில், மதுரை மீனாட்சி அம்மன் - சொக்கநாதருக்கான பல்லக்கில் கட்டியிருந்த அலங்கார திரைகள், நாங்கள் தயாரித்தது தான்.
திருப்பரங்குன்றம் தேர்த் திருவிழா, திருவானைக்காவல் தேர் அ லங்காரம், சமீபத்தில் திருவாதவூர் மாணிக்கவாசகர் கோவிலுக்காக பாண்டியன் கொண்டை என்ற கிரீடம் ஆகியவற்றையும் நாங்கள் செய்து கொடுத்திருக்கிறோம்.
கடந்த 2016 முதல், திருவண்ணாமலை மூலவருக்கான திரையையும் நாங்கள் தான் செய்து கொடுத்து வருகி றோம்.
கர்நாடகாவில் உள்ள சிருங்கேரி மடம், ஹைதராபாத், விஜயவாடா போன்ற இடங்களில் உள்ள கோவில்களுக்கும் எங்களின் அலங்கார பொருட்களை அனு ப்பி இருக்கிறோம்.
தாய்லாந்து மகா மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு, எங்களிடம் இருந்து தான் அலங்கார பொருட்கள் தற்போது வரை செல்கின்றன. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா நாடுகளுக்கும் அனுப்பி வருகிறோம்.
மதுரையில் பலர் இந்த தொழிலை செய்து வருகின்றனர்; இதனால், கணிசமான போட்டியும் இருக்கிறது.
ஆயினும், மற்றவர் களிடம் இருந்து தனித்துவமாக தெரிய, வித்தியாசமான கலைநயமும், தரமான பொருட்களும் கொண்டு உருவாக்கும் போது, வாடிக்கையாளர்கள் திருப்தி அடைவர்.
எந்த தொழிலிலும் நம் வாடிக்கையாளர்கள் திருப்தியடைந்தால், மீண்டும் மீண்டும் தேடி வருவர்!
மேலும்
-
ஆட்சி மாற்றத்திற்கு பின் விளாத்திகுளம் மாணவி விவகாரத்தில் உரிய நீதி; நயினார் நாகேந்திரன்
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் வழக்கு; ஏப்ரல் 9க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைப்பு
-
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிய கோரி ஐகோர்ட்டில் திமுக மனு
-
அவை நடைமுறை விதிகளை மறுஆய்வு செய்யுங்கள்; ராஜ்யசபாவில் கார்கே வலியுறுத்தல்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!