தேசியம் பேட்டி

வளர்ச்சி பாதையில் வர்த்தகம்! மேற்காசியாவில் போர்ச்சூழல் நீடித்தாலும், நம் நாட்டின் வர்த்தகம் வளர்ச்சி பாதையில் செல்கிறது. பொருளாதார நிலையும் வலுவாக உள்ளது. பல்வேறு நாடுகளுடன் கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, விவசாயிகள், மீனவர்கள், சேவைத்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பயன்பெறுவர். பீயூஷ் கோயல் மத்திய அமைச்சர், பா.ஜ.,

தெளிவுபடுத்த வேண்டும்
! சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்கள் நுழைவது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மீதான தங்கள் நிலைப்பாட்டை கேரள அரசு தட்டிக்கழித்து வருகிறது. இதை அவர்கள் ஆதரிக்கிறார்களா, இல்லையா என்பதை முதல்வர் பினராயி விஜயன் தெளிவுபடுத்த வேண்டும். கே.சி.வேணுகோபால் பொதுச்செயலர், காங்கிரஸ்

சட்டம் - ஒழுங்கு தோல்வி! ஆந்திராவில், சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு முழு தோல்வி அடைந்துள்ளது. போதைப்பொருள் வழக்கில் ஆளுங்கட்சி எம்.பி., பிடிபட்டுஉள்ளார். இந்த வழக்கில், யார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜெகன் மோகன் ரெட்டி தலைவர், ஒய்.எஸ்.ஆர். காங்.,

Advertisement