வாகன தணிக்கையில் கலெக்டர்

பெ.நா.பாளையம்: சட்டசபை தேர்தலையொட்டி வாகன தணிக்கை செய்யும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்., 23ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் கொண்டு செல்லும் நபர்கள் அதற்குரிய ஆவணங்களுடன் பயணிக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நகர், புறநகர் பகுதிகளில், 24 மணி நேரமும் வாகன தணிக்கையில் சிறப்பு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பணியை நேற்று முன்தினம் இரவு கோவை கலெக்டர் பவன் குமார் ஆய்வு செய்தார். மேட்டுப்பாளையம் ரோடு பிரஸ் காலனி அருகே ஆய்வு பணியில் ஈடுபட்டு, அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.

Advertisement