த.வெ.க.,வில் போட்டியிட 26 பேர் விருப்ப மனு
அன்னுார்: தமிழக வெற்றி கழகத்தில், அவிநாசி தொகுதியில் போட்டியிட, 26 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
அவிநாசி (தனி) தொகுதியில் த.வெ.க.,வில் போட்டியிட கடந்த மாதம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதில் அவிநாசி தொகுதியில் போட்டியிட 26 பேர் தலா 5,000 ரூபாய் செலுத்தி விருப்ப மனு அளித்துள்ளனர். சென்னையில் தலைமை அலுவலகத்தில் நேற்று நேர்காணல் துவங்கி உள்ளது.
இதுகுறித்து த.வெ.க., நிர்வாகிகள் கூறுகையில், அவிநாசி தொகுதியில் போட்டியிட, அவிநாசி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த பிரபு, கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ், அன்னுார் வடக்கு ஒன்றிய செயலாளர் விஜய் உள்பட 26 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
அவிநாசி தொகுதியில் விஜய் ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர். எனவே இங்கு போட்டியிட நிர்வாகிகளிடம் கடும் போட்டி நிலவுகிறது,' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement