சாதனைப் பயணம் தொடரும்; முதல்வர் ஸ்டாலின் உறுதி
சென்னை: ''நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும் வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும். தமிழகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோடும்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
திமுக அரசின் திட்டங்கள் குறித்து ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீடியோவை முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், '' என் வாழ்நாளில் திமுகவுக்கு ஓட்டு போட்டது கிடையாது. அது என்ன மேஜிக் என்று தெரியவில்லை. இந்த 2026 திமுகவுக்கு தான் நான் ஓட்டு போட போகிறேன்.
முதல்வர் ஸ்டாலின் நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அவர் கொண்டு வந்துள்ள ஒரு திட்டத்தை ரத்து செய்தாலும் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும்'' என கூறியுள்ளார்.
இந்த வீடியோவை மேற்கோள் காட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஆட்சிப் பொறுப்பேற்றதும், “வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைவது மட்டுமல்ல; வாக்களிக்காதவர்களும், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று எண்ணும்படியான ஆட்சியை வழங்குவேன்” என்று சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளேன் என்பதற்கு இந்த வீடியோவே சான்று.
நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும். தமிழகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோடும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
செததானுங்க மறுபடியும் இவுகளை தேர்ந்தெடுத்தா.
சாதனைப்பற்றி பேசும் முதல்வர் மக்களின் வேதனைகளை கொஞ்சம்கூட அறிந்தவராக இல்லையே சோதனை மேல் சோதனை வேண்டுமடா சாமி இந்த ஆட்சியில் நடந்த சோதனைகளினால் மக்கள் அடைந்த வேதனைகள் கனாக்கிகனாக்கிலடங்காது
அய்யா சாமி உனக்கு புண்ணியமாப்போவும்..., தயவுசெய்து எங்கள உட்ருயா...பாவம், பிள்ளைகள் எல்லாம் கதறுதையா... இனிமேலும் ஆட்சியை நாடு தாங்காது... அப்புறம் பாகிஸ்தான்காரன் உள்ள வந்துருவான்...
திமுகவின் சோதனைப்பயணம் இனியும் தமிழகத்தில் தொடரக்கூடாது.
வேதனையை சாதனை என்று சொல்லுகிறீரே அப்பா நியாயமா?
அப்பா, நாங்களும் உங்கள் கையை பிடித்துக்கொண்டு, உங்களுடன் அடுத்த 5 ஆண்டுகளுக்கு சாதனை பயணம் தொடர்ந்திட, தமிழக வளர்ச்சி பாதையில் நடந்திட, ஆவலாக உள்ளோம். எங்களையும் உங்களுடன் அழைத்து செல்லுங்கள் அப்பா.
வாசன் அப்படியே உன் சந்ததியையும் கூட்டி செல்...
சா = சோ
நாங்கள் கொள்ளையடிக்கும் சாதனைப் பயணம் தொடரும் தமிழகம் சூழ்ச்சி பாதையில் நடைபோடும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி இப்படி படியுங்கள் உண்மையான அர்த்தம் தெரியும்
கொள்ளைபடிப்பது தொடரும் என வாக்குமூலம் கொடுக்கிறாரா ?
தேர்தல் நடைமுறை விதிகள் வந்தபின்பும் மகளிர் விடியல் பயணம் என்ற போர்டுடன் பஸ்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன . விடியல் என்ற சொல் திமுகவினுடையது. அப்படியிருக்க அரசு பஸ்களில் ஒரு கட்சியின் கொள்கையை விளம்பரப்படுத்தலாமா ? தேர்தல் கமிஷன் கவனிக்குமா ?