பங்குனி மாத அமாவாசை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

கரூர்:புன்னம் சத்திரம் கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், பங்குனி மாத அமாவாசையையொட்டி, சிறப்பு அலங்காரம் நடந்தது.


பிரசித்தி பெற்ற, கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில், பங்குனி மாத அமாவாசையையொட்டி, மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து சந்தன காப்பு மற்றும் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில், மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல், கரூர் மாரியம்மன் கோவில், தலையூர் மாரியம்மன், புகழூர் மாரியம்மன், பொன்னாச்சி அம்மன், திருகாடுதுறை மாரியம்மன், தோட்டக்குறிச்சி மலையம்மன், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில்களில், பங்குனி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

Advertisement