பறக்கும் படையினரால் ரூ.9.36 லட்சம் பறிமுதல்

ஓசூர்:ஓசூர் சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படையினர், நேற்று முன்தினம் இரவு, ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே வாகன சோதனை செய்தனர்.


அப்போது, கர்நாடகா மாநிலத்திலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, ராகுல்ரெட்டி, 35, என்பவர் உரிய ஆவ-ணங்களின்றி, 3.72 லட்சம் ரூபாயை கொண்டு செல்வது தெரிந்-தது. அதை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், ஓசூர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆக்ரிதி சேத்தியிடம் ஒப்படைத்தனர்.


* பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியில், நேற்று காலை, 9:00 மணியளவில் அரூர் - சேலம் ரோட்டில் மஞ்சவாடி அடுத்த கோம்பூர் சோதனைச்சாவடியில், அரூரிலிருந்து சேலம் நோக்கி வந்த, டாடா ஏசி வாகனங்களை நிறுத்தி, பறக்கும் படை-யினர் சோதனையிட்டனர்.

இதில் சேலம் மாவட்டம் வீராணம் அடுத்த பள்ளிப்பட்டியை சேர்ந்த மாட்டு வியாபாரி மகேந்திரன், 40, உரிய ஆவணமின்றி கொண்டு வந்த, 90,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

சேலம் மாவட்டம் மின்னம்பள்ளியை சேர்ந்த ரமேஷ், 30, என்ப-வரிடம், 24,000 ரூபாய், டாடா ஏசி வாகன டிரைவர் பே.தாதம்பட்டியை சேர்ந்த அமல்ராஜ், 37, என்பவரிடம், 40,000 ரூபாய், மற்றொரு வாகனத்தில் அயோத்தியாபட்டணத்தை சேர்ந்த தனசேகரன், 44, என்பவரிடமிருந்து, 65,000 ரூபாய் என மொத்தம், 2.19 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், ஒடசல்பட்டி கூட்ரோட்டில் நேற்று மாலை, 4:00 மணி-யளவில் மொரப்பூரில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த ஸ்விப்ட் டிசையர் காரில், உரிய ஆவணமின்றி எம்.தொப்பம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார், 38, என்பவர் கொண்டு வந்த, 1.13 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

* ஒகேனக்கல், ஆலம்பாடி சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கை நடத்தினர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த வந்த தர்மபுரியை சேர்ந்த குண-சேகரன் என்பவர் வைத்திருந்த, 1.62 லட்சம் ரூபாய் மற்றும், 706 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், நாகதாசம்பட்டி பிரிவு சாலையில் வாகன தணிக்-கையில், கூத்தப்பாடியை சேர்ந்த பாலாஜி என்பவர் காரில் கொண்டு வந்த, 68,350 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


Advertisement