அவை நடைமுறை விதிகளை மறுஆய்வு செய்யுங்கள்; ராஜ்யசபாவில் கார்கே வலியுறுத்தல்
புதுடில்லி: அவையின் நடைமுறை விதிகள் மற்றும் அலுவல் நடத்தை விதிகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்பி மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
பார்லிமென்டின் ராஜ்யசபா துணைத் தலைவராக உள்ள மூத்த எம்பி ஹரிவன்ஷ் நாராயண் சிங்கின்பதவி காலம் நிறைவடைவதை தொடர்ந்து அவருக்கான பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சி அவையில் நடந்தது.
பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பல்வேறு மூத்த எம்பிக்கள் உரையாற்றினர். அப்போது மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:
* அவையின் நடைமுறை விதிகள் மற்றும் அலுவல் நடத்தை விதிகளை மறுஆய்வு செய்ய வேண்டும்.
* முக்கியத்தும் வாய்ந்த விவகாரங்கள், பிரச்னைகள் அவையில் விவாதிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
* பார்லிமென்ட் அவையின் அமர்வுகள் அதிக நாட்கள் நடைபெற வேண்டும். சட்டங்களை இயற்றுவதில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும்.
* அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் பொதுவாழ்விலிருந்து ஒருபோதும் ஓய்வுபெறுவதில்லை; தேசத்திற்குச் சேவையாற்றுவதில் அவர்களுக்குள்ள ஆர்வம் ஒருபோதும் தளர்வடைவதுமில்லை.
* அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு எம்பிக்களும் தங்கள் கருத்துக்களை அச்சமின்றி வெளிப்படுத்தும் சுதந்திரத்தை வழங்குகிறது.
* பொதுமக்களைப் பாதிக்கும் பிரச்னைகள் குறித்து அவையில் நிச்சயமாக விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். ஏழைகள், சமூகத்தின் விளிம்புநிலை மக்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்கள் தொடர்பான பிரச்னைகளைப் விவாதிப்பதற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
* பெரும்பாலும், நாங்கள் இப்பிரச்னைகளை எழுப்பும்போது, ஆளும் கட்சியினர் அதை ஒரு விமர்சனமாகவே கருதி, முழுமையாகக் காதுகொடுத்துக் கேட்காமலேயே மறுக்கத் தொடங்குகின்றனர்.
* மக்களின் பிரச்னைகளை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கார்கே பேசினார். கார்கே தற்போது ஓய்வுபெற்றாலும், அவர் மீண்டும் ராஜ்யசபா எம்பியாக பதவியேற்க உள்ளார்.
வாசகர் கருத்து (15)
Appan - London,இந்தியா
18 மார்,2026 - 19:07 Report Abuse
இவர் 50 வருடத்து மேல் ஆட்சி செய்த காங்கிரசின் கட்சி தலைவர். இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் இன்று கேட்டால் எல்லோரும் சோனியா காந்தி என்று தான் சொல்கிறார்கள். அப்போ இவர் யார்...?. ஒரு வெளிநாட்டுக்காரருக்கு சேவகம் செய்யும் இந்தியர். இப்படி ஒரு கட்சியை நடத்தினால் அந்த கட்சி இருக்குமா ..?. மஹாத்மா காந்தி இருந்த காங்கிரஸ் எங்கெ போனது. ..> இப்போ உள்ள காங்கிரசை பெரும்பான்மை இந்துக்கள் காங்கிரஸ் இந்தியாவின் கட்சி இல்லை என்று , எதிர்கட்சிக்கு சென்று விட்டார்கள். பெரும்பான்மை இந்துக்களை மதிக்காத காங்கிரஸ் எப்படி இந்தியாவில் ஆட்சியை பிடிக்கும். கட்சியின் தலைமை உடம்பு இந்தியாவில் உள்ளம் ரோமில்இருந்தால் இந்தியர்கள் அவர்களுக்கு ஒட்டு போடுவார்களா ..இது போக தலைமை பண்பு இல்ல ராகுலுக்கு கூஜா துக்கும் கட்சியினர் காங்கிரசை அழித்தது விடுவார்கள். காங்கிரசுக்கு முதலில் தலைமை பண்பு உள்ள ஒரு இந்தியர் தலைவராக வரணும். அப்போ தான் காங்கிரஸ் இந்தியாவில் இருக்கும் இல்லை அழிந்தும் விடும்.. 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
18 மார்,2026 - 18:49 Report Abuse
சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது.. 0
0
Reply
GMM - KA,இந்தியா
18 மார்,2026 - 17:39 Report Abuse
நடைமுறை, அலுவல் நடத்தை விதிகளை ஏன், எப்படி யார் மறு ஆய்வு செய்ய வேண்டும். தேசிய முக்கியம் வாய்ந்த விவகாரங்கள், பிரச்சினைகள் என்ன? எப்படி வரிசை படுத்த வேண்டும். சட்ட குறைபாட்டை கூற தான் எதிர்க்கட்சி. பங்கேற்க ஆளும் கட்சியில் சேர வேண்டும். சட்டம் மசோதா பரிந்துரை, உறுப்பினர் கூறும் கருத்துகள் சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். நீதிபதிகள் போல் சாசனத்தில் இல்லாத கொலிஜியம் முறை மற்றும் கருத்து கூடாது. அவர்களுக்கு மத்திய அரசு விதிவிலக்கு கொடுத்து வருகிறது. நீதிமன்றம் தான் நாட்டின் பிரச்சனைக்கு தீர்வு காண அடித்தளம். அங்கு நிர்வாக ஒழுங்கு இல்லை என்றால் ஊழல் வளரும். தேசிய பாதுகாப்பு குறையும். 0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
18 மார்,2026 - 17:21 Report Abuse
அவை நடைமுறை விதிகளை மறுஆய்வு செய்யுங்கள் ராஜ்யசபாவில் கார்கே வலியுறுத்தல். இவர் சொல்வது 100% சரியானது .????எப்படி???விதிகள் இப்படி மாற்றப்படவேண்டும்??1 உதாரணம் ராவுல் . இந்தியாவிற்கு எதிராக உளறும் எம்பி அடுத்த 10 ஆண்டுகள் எம்பியாக நிற்க தகுதியில்லை என்ற நடைமுறை விதிகள் கொண்டுவரவேண்டும் என்று சொல்வதாக எடுத்துக்கொண்டு மாற்றம் செய்யவேண்டும். என்ன கார்கே சரிதானே 0
0
Reply
V S Venkataramani - ,இந்தியா
18 மார்,2026 - 16:34 Report Abuse
Yes. There should be exemplary punishment for irresponsible, arrogant behaviour of members, whoever it may be. Discussion should be based on facts and not on generalistic statement without any substances. Mainly, there should not be any ruckus and consequent adjournment. Its, anyway, not going to yield any good results to the general public, instead its only paves way to waste of tax payers money. 0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
18 மார்,2026 - 16:10 Report Abuse
இந்தாளு மூஞ்சியை பார்த்த எதுவும் விளங்காது. இன்னையோட இதுனோட டேர்ம் முடியுது ராஜ்யா சபாவில்ல 0
0
Reply
Anand - chennai,இந்தியா
18 மார்,2026 - 15:58 Report Abuse
தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு துரோகம் செய்து சபையில் அமளி, அராஜகத்தில் ஈடுபட்டு இத்தாலி மாபியாக்களுக்கு சாமரம் வீசும் இழிபிறவிகளை உடனே பதவி நீக்கம் செய்து ஜெயிலில் அடைக்கும் சட்ட நடைமுறையை அமுல்படுத்துங்கள். 0
0
Reply
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
18 மார்,2026 - 15:47 Report Abuse
ரவுலுக்கே வேட்டு வைக்கிறார் நல்லது 0
0
Reply
அசோகன் - ,
18 மார்,2026 - 15:31 Report Abuse
எங்க தலைவர் கேட்பதில் முழு நியாயம் இருக்கிறது....இதை உடனே பிஜேபி அரசு பார்லிமெண்டில் அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு mp களும் சக்தி இருக்கும் அளவு கத்தி கூச்சல் போட, அடுத்த mp களை செல்லமாக நாலு தட்டு தட்ட, ஆடைகளை கழட்டி கையில் சுழற்ற, கையில் கையில் கிடைப்பதை எல்லாம் எடுத்து வீச, சபாநாயகரை சுழ்ந்து கூச்சல் போட, கோபம் வந்தால் சட்ட பேப்பர்களை கிழித்து ஏறிய இல்லை பட்டம் விட, உள்ளே பிஸ்கட் சமோசா சாப்பிட்டு அந்த பேப்பர் ஐ அடுத்தவர் தலையில் போட, கூடையில் சமோசா மீன் போன்றவைகளை கூவி விற்க என மனிதனின் அத்தியாவசிய உரிமையை கொடுக்கவேண்டும் அதற்கு சட்டத்தை மாற்றியே தீரவேண்டும். 0
0
Reply
vee srikanth - chennai,இந்தியா
18 மார்,2026 - 15:29 Report Abuse
அடிமைகளை முன்னிறுத்தி ஆள விரும்பும் கிராஸ் 0
0
Reply
மேலும் 5 கருத்துக்கள்...
மேலும்
-
தி.மு.க., கூட்டணியில் எங்களால் பிரச்னை இல்லை என்கிறார் பிரேமலதா
-
பாதாள சாக்கடை கட்டும் பணி குருகிராமில் போக்குவரத்து மாற்றம்
-
பணத்தை காட்டு; வேட்பாளராகு.. விஜய் அறிவிப்பு: த.வெ.க., 'ஷாக்'
-
பாலம் தீ விபத்து: நீதி விசாரணைக்கு உத்தரவு
-
முகலாயர் கால பாரபுல்லா பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு
-
வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ.7 கோடி மஞ்சள் வர்த்தகம்
Advertisement
Advertisement