பாதாள சாக்கடை கட்டும் பணி குருகிராமில் போக்குவரத்து மாற்றம்

குருகிராம்: ஹரியானா மாநிலம், குருகிராம் போலீஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு :

குருகிராம் மாநகரில் பாதாள சாக்கடை கட்டும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதனால், 74வது செக்டார் முதல் 8-0வது செக்டார் வரை எஸ்.பி.ஆர்., உட்பட பல சாலைகளில் இரண்டு மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஷிகோபூர் கிராமம் மற்றும் மானேசர் போலீஸ் குடியிருப்பு ஆகிய சாலையில் இரு மாதங்களுக்கு வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும்.

வத்திகா சவுக்கில் இருந்து வரும் வாகனங்கள், எஸ்.பி.ஆர். சாலை, தேசிய நெடுஞ்சாலை - -48, கிளிம்பர் லிப்ட் மற்றும் கெர்கி தவுலா சுங்கச்சாவடி வழியாக திருப்பி விடப்படும்.

துவாரகா விரைவுச் சாலையிலிருந்து 74வது செக்டார் முதல் 80 வரையிலான பகுதிக்கு வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை--48, கிளிம்பர் லிப்ட், மற்றும் கெர்கி தவுலா சுங்கச்சாவடி வழியாக செல்லலாம்.

ராஜிவ் சவுக்கில் இருந்து வரும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலை- - 48 வழியாக கெர்கி தவுலா சுங்கச் சாவடிக்கு செல்ல முடியும். அதேநேரத்தில், மானேசர் பச்கவுன் சவுக்கில் இருந்து வரும் வாகனங்கள் கெர்கி தவுலா சுங்கச்சாவடியில், 'யு' வளைவில் திரும்பி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement