தி.மு.க., கூட்டணியில் எங்களால் பிரச்னை இல்லை என்கிறார் பிரேமலதா
சென்னை: ''தே.மு.தி.க.,வால் தி.மு.க., கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை; விரைவில் தொகுதி பங்கீடு முடிவுக்கு வரும்,'' என, தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா கூறினார்.
தனது 60வது பிறந்த நாளையொட்டி, சென்னை - சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில், பிரேமலதா 'கேக்' வெட்டி கொண்டாடினார்.
அதன் பின் அவர் அளித்த பேட்டி:
முதல்வர் ஸ்டாலின், மொபைல் வாயிலாக எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். 'மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., கட்சிகள், வி.சி.,க்கள் உடனான தொகுதி பங்கீடு ஓரிரு நாளில் முடிக்கப்படும்' என, முதல்வர் கூறினார். அதன் பிறகு, விரைவில் தே.மு.தி.க.,வை அழைப்பதாகவும் கூறியுள்ளார்.
தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்திருப்பதால், ஏற்கனவே கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு, தொகுதிகள் குறைத்து தரப்படுவதாக கூறப்படுவது தவறு.
எங்கள் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை; கூட்டணி உறவு சுமுகமாக உள்ளது. தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால், தொகுதி பங்கீட்டை விரைந்து முடித்து பிரசாரத்தை துவங்க உள்ளோம்.
அ.தி.மு.க., - எம்.பி., சி.வி.சண்முகம், பெண்கள் குறித்து மிகவும் அநாகரிகமாக பேசியுள்ளார். அவர் எழுப்பிய கேள்வியை, அவரது குடும்பத்தை சேர்ந்த பெண்களிடம் கேட்டால் ஏற்றுக் கொள்வாரா? யாராக இருந்தாலும், பெண்களுக்கு எதிராக பேசுவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால், பெண்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்படியே பொன்முடி, சைதை சாதிக், சிவாஜி கிருஷ்ண மூர்த்தி இவர்களை எதிர்த்தும் போராட்டம் நடத்துங்க!
உங்களால தி.மு.க கூட்டணியில் பிரச்சனை இல்லை. அமெரிக்க அதிபர் டிரம்பாலதான் தி.மு.க கூட்டணியில் பிரச்சனை!
இந்தப் பெண்மணியை கூட்டணிக்குள் அனுமதித்தது மிகப்பெரிய தவறு என்பதை மே 4 அன்று ஸ்டாலின் அவர்கள் உணர்வார்
Every one in dmk alliance are against hindus. ADMK too the same but now the scale must be which is low cause
இருந்த வெள்ளத்தை வந்த
வெள்ளம் அடித்துக்கொண்டு போச்சு என ஒரு பழமொழி உண்டு தெரியுமா...அது தி.மு.க.வில் நடக்கிறது உங்கள் வருகையால்
இன்றைய முதல்வர் தலைமையில் திமுக பிரச்சனையான கட்சியாய் பயணித்துக் கொண்டு இருக்கின்றது. பிரச்சனையில்லை என்று நீங்கள் மழுப்புகின்றீர்கள். மத வுணர்விற்கும் சமயவுணர்விற்கும் வேறுபாடு தெரியாத முதல்வர். சமய வுணர்வின் அருமை அறியாது, சமய உணர்வுக் கொண்ட தமிழர்களின் நெஞ்சங்களை நிறைய புண்படுத்தி விட்டார். தமிழ் என்றால் கடவுள் வழிபாடுதான் நினைவிற்கு வரும்.
திருப்பரங்குன்ற தீபத் தூண் மலைவிவகாரம் இதற்கொரு நல்லச் சான்று. இனியென்றைக்கும் இது வரலாற்றுச் சான்றாகயிருக்கும். ஒரு நல்ல தமிழராக இவர் இருந்தால் இப்படியெல்லாம் செய்யமாட்டார். மக்களின் உணர்வு வரும் தேர்தலில் இவருக்கெதிராக திரும்பலாம். அதற்க்கு நிறைய வாய்ப்புள்ளது. பிரச்னை இல்லையென்று மழுப்ப வேண்டாம்
அதான் பொட்டி வந்துவிட்டது இனி என்ன பிரச்னை
நீயா பெரும் போராட்டமா
சிறந்த நகைச்சுவை
ஜெயிக்க முடியாத ஓரிரு தொகுதிகள் கொடுத்து ஓரங்கட்டி வைத்து ஒரு ராட்ஜ்ஜிய சபா சீட் கொடுப்பார்கள்.
இந்த பிரேமலதா என்னைக்கு திமுக கூட்டணியில் காலை எடுத்து வச்சாரோ அப்போதே அந்தக் கூட்டணியில் அடிதடி, மல்லுக்கட்டு, குடிமிப்பிடி சண்டை ஆரம்பம் ஆகிவிட்டது.
ஆமை புகுந்த வீடு கூட நல்லா இருக்கும். ஆனால் இந்த பிரேமலதா சேர்ந்த எந்த கூட்டணியும் உருப்படாது.