உணவு தேடி ஊர்ப்பகுதிக்கு வந்த காட்டெருமை பலி

திருச்சி : வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீர் தேடி வந்த பெண் காட்டெருமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது.


திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள பிள்ளையார் கோவில்பட்டியில் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலை, உணவு மற்றும் தண்ணீர் தேடி, இரண்டரை வயதுள்ள பெண் காட்டெருமை, திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு வந்துள்ளது. அப்போது, வாகனம் மோதி துாக்கி வீசப்பட்ட காட்டெருமை, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. வனத்துறையினர் சம்பவ இடம் சென்று, காட்டெருமையின் உடலை பரிசோதனை செய்து, கிருமி நாசினிகள்
தெளித்து, வனப்பகுதியில் புதைத்தனர்.

Advertisement