நியோமேக்ஸ் சொத்து ஏலம் பங்கேற்க போலீசார் அழைப்பு
மதுரை: மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கிய நியோமேக்ஸ் பிராபர்டிஸ் பிரைவேட் லிட்., பொதுமக்களிடம் அதிக முதலீடுகளை பெற்று ரூ.7 ஆயிரம் கோடி மோசடி செய்தது. இதுதொடர்பான வழக்கில் அதன் சொத்துக்களை ஏலம்விட உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.
இதன்படி நியோமேக்ஸ் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் அசையா சொத்துக்களில் DTCP அங்கீகாரம் பெற்ற மனையிடங்கள் ஏலம் விடப்படுகிறது. MSTC வலைதளம் (www.mstcecommerce.com) மூலம் மின்னணு ஏலத்தில் பங்கேற்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அழைப்புவிடுத்துள்ளனர்.
ஏலம் தொடங்கி விட்ட நிலையில் அதில் பங்கேற்க விரும்புவோர் வலை தளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதில் சந்தேகம் இருந்தால் மார்ச் 23, 24ல் மதுரை பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தை நேரில் அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 90803 81065, 87782 45559ல் தொடர்பு கொள்ளலாம் என போலீசார் அறிவித் துள்ளனர்.
மேலும்
-
வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள்; ஈரானுக்கு சவுதி அரேபியா எச்சரிக்கை
-
எல்.பி.ஜி.,க்கு மாற்றாக டி.எம்.இ., காஸ் தொழில்நுட்பம்
-
சீமைக்கருவேல மரங்களை அகற்ற நீதிபதிகள் தலைமையில் குழு; உயர்நீதிமன்றம் உத்தரவு
-
லாரி மோதி ஒருவர் பலி
-
தாய், குழந்தை சடலம் மீட்பு
-
கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்