மழையால் கண்ணீர் வடிக்கும் வடுகபட்டி நெல் விவசாயிகள்

வாடிப்பட்டி: வடுகபட்டியில் 2 நாள் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் உதிர்ந்தும், சாய்ந்தும் கிடப்பதால் மகசூல் கடுமையாக பாதித்துள்ளதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்,

விவசாயிகள் பாலமுருகன், லட்சுமண பெருமாள் கூறியதாவது: கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்தோம். நெற்பயிர்கள் நன்கு விளைந்திருந்தன. தண்ணீர் பற்றாக்குறையால் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கூடுதல் நீர் கேட்டு காத்திருந்தோம்.

நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழையால் நெற் கதிர்கள் உதிர்ந்து வீணானது. வடுகபட்டி, ஆண்டிபட்டி, தனிச்சியம், செம்புகுடிப்பட்டி பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் கதிர்கள் உதிர்ந்து போனது. ஏக்கருக்கு 10 மூடை கிடைத்தாலே அதிகம். வைகோலுக்கும் தேராத நிலை உள்ளது. கட்டக்குளம் பகுதியில் அதிகளவில் பயிர்கள் நீரில் மூழ்கின. ஏக்கருக்கு 40 மூடை எதிர்பார்த்த எங்கள் கனவில் மழை மண்ணை துாவிவிட்டது. அதிகாரிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

Advertisement