அரிசி வியாபாரியிடம் ரூ.80,000 பறிமுதல்

திருச்சி : அரிசி வாங்க, வியாபாரி கொண்டு சென்ற, 80,000 ரூபாயை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம், சீலைப்பிள்ளையார் புதுாரை சேர்ந்த அரிசி வியாபாரி பழனிகுமார். இவர், நேற்று காலை, 'ஆம்னி' வேனில் மொத்தமாக அரிசி வாங்குவதற்காக சென்றார். அப்போது, சீலைப்பிள்ளையார் புதுார் பிரிவு ரோடு அருகே, தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்தனர்.

ஆம்னி வேனில் வந்த பழனிகுமாரை சோதனையிட்டபோது, அவர் உரிய அனுமதி பெறாமல், 80,000 ரூபாய் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அதை பறிமுதல் செய்து, முசிறி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லோகநாதனிடம் ஒப்படைத்தனர்.

Advertisement