இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உளவுத்துறை அமைச்சர் உயிரிழப்பு
டெஹ்ரான்: ஈரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப், விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இன்றைய நாளில் அனைத்து பகுதிகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விமானப்படை தாக்குதலில் ஈரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதீப் கொல்லப்பட்டுள்ளார்.அவர்களைவேட்டையாடுவது தொடரும். ஈரானின் மூத்த அதிகாரிகளை குறிவைத்து கொல்லும்படி இஸ்ரேல் ராணுவத்துக்கு பிரதமர் நெதன்யாகு அனுமதி வழங்கி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், இஸ்மாயில் கதீப் கொல்லப்பட்டதை ஈரான் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இது ஊர்ஜிதமானால், கடந்த இரண்டு நாட்களில் உயிரிழக்கும் 3வது மூத்த அதிகாரி இவர் ஆவார். கடந்த இரண்டு நாட்களில் ஈரானின் பஸ்ஜி படையின் தலைவரான சுலைமானியும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி லரிஜானியும் இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போர் துவங்கிய முதல் நாளிலேயே ஈரானின் ஆட்சியாளராக இருந்த கமேனி கொல்லப்பட்டார்.
தற்போது உயிரிழந்த இஸ்மாயில் கதீப், ஈரானின் நீதித்துறை மற்றும் புலனாய்வு அமைச்சகங்களில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி உள்ளார். ஈரான் - ஈராக் இடையிலான போரின்போது புரட்சிகர படையில் பணியாற்றினார். போரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.
வாசகர் கருத்து (4)
பேசும் தமிழன் - ,
18 மார்,2026 - 19:37 Report Abuse
நேற்று அலி லாரிஜானி... இன்று இவர்.... சீக்கிரம் ஈரானை முடித்து விட்டு.... பாகிஸ்தான் பக்கம் வாருங்கள்... அந்த இரண்டு நாடுகளும் தான் தீவிரவாதிகளின் உற்பத்தியாளர்கள். 0
0
Reply
ஜெகதீசன் - ,
18 மார்,2026 - 18:32 Report Abuse
சபாஷ் ... மேலும் ஒரு விக்கட். சீக்கிரம் ஆட்டத்தை முடிச்சு வைங்க, ஈரான் மக்கள் சுதந்திரமாக வாழட்டும், உலகில் தீவிரவாதமும் ஒழியட்டும். 0
0
Reply
RK - ,
18 மார்,2026 - 17:48 Report Abuse
சீக்கிரமா முடிச்சு விடுங்க தலைவரே... தீவிரவாதிகளை தலை தூக்க விடக்கூடாது. 0
0
Reply
SUBBU,MADURAI - ,
18 மார்,2026 - 17:22 Report Abuse
இன்று அனைத்து முனைகளில் இருந்தும் பெரும் எதிர்பாராத நிகழ்வுகள் எதிர்பார்க்கப் படுவதாகவும், இது போரை ஒரு புதிய நிலைக்கு உயர்த்தும் என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கூறுகிறார். ஈரான் இலக்கு மூடப்பட்டவுடன், மேலதிக ஒப்புதல் இன்றி எந்தவொரு ஈரானிய அதிகாரியையும் கொல்ல இஸ்ரேலிய பாதுகாப்புப் படைக்கு (IDF) அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார். 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement