சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளி 5ம் ஆண்டு விழா
சேலம்: சேலம் சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின், 5ம் ஆண்டு விழா வள்ளியப்பா ஆடிட்டோரியத்தில் கொண்டாடப்பட்டது. சோனா கல்வி நிறுவன தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். தாளாளர் சீதா, துணைத்தலைவர்கள் சொக்கு, தியாகு, விசாலாட்சி, வள்ளி, வருண் முன்னிலை வகித்தனர்.
தோல் மற்றும் அழகியல் மருத்துவர் பாவை செந்தில், மாணவர்-களின் கல்வி மற்றும் கலைத்திறமைகளை வெளிப்படுத்திய விதம் குறித்து பாராட்டினார். கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார். மேலும் நடனம், நாடகம், தேசப்பற்றை வெளிப்படுத்தும் தனி நடிப்பு என, மாண-வர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டுவரும்படி கலைநிகழ்ச்சி அமைந்திருந்தது. பள்ளி இயக்குனர் கார்த்தி-கேயன், முதல்வர் கவிதா, ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement