ரம்ஜான் - வார இறுதி நாள் 100 சிறப்பு பஸ் இயக்கம்
திருப்பூர்:நாளை (21ம் தேதி) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பயணிகள் வசதிக்காக, 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களில் வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, வாரந்தோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நடப்பு வாரம் நாளை (21 ம் தேதி) ரம்ஜான் மற்றும், 22ம் தேதி ஞாயிறன்று கோவில்வழியில் இருந்து, 50, மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 20, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்த, 30 என மொத்தம், 90 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. 'பெருந்துறை, பவானி, சேலம், விழுப்புரம் வழியாக சென்னைக்கு இரண்டு நாட்களும் தலா, ஐந்து பஸ்கள் வீதம், பத்து பஸ்கள் இயக்கப்படும். வழக்கமான வழித்தடத்தில் கூட்ட நெரிசல், பஸ்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால், அதற்கேற்ப கூடுதல் பஸ் இயக்க முடிவெடுக்கப்படும்,' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போரை நிறுத்துவதற்கு இதுவே சரியான நேரம்: ஐநா பொதுச்செயலர் வலியுறுத்தல்
-
அரிதான புற்றுநோய் கட்டி 64 வயது மூதாட்டிக்கு அகற்றம்
-
கூடுதல் கட்டணம் தந்தும் பயணியருக்கு...மன உளைச்சல்!நெரிசலில் திணறும் பிரீமியம் 'ஏசி' பஸ்கள்
-
வல்லுாரில் மின் உற்பத்தி பாதிப்பு
-
இரு கடைகளில் திருட்டு: கொடுங்கையூரில் பீதி
-
'லிப்ட்' பாதை வழியாக விழுந்து தொழிலாளி பலி
Advertisement
Advertisement