ஆதரவாளர்கள் புடைசூழ நேர்காணலுக்கு பயணம்: உள்ளூர் கட்சி ஆபீஸ்கள் காலி
தொண்டாமுத்தூர்: சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக, தி.மு.க. சார்பில் 6ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதில், தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து, தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் ரவி, மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் சந்தோஷ், பூலுவபட்டி பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி என, 30க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் வேட்பாளர் நேர்காணல் நேற்று சென்னையில் நடந்தது. இதற்காக, விருப்ப மனு அளித்தவரகள், தங்கள் ஆதரவாளர்களை திரட்டிக் அங்கு சென்றனர். தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வந்த உடன்பிறப்புகள் சென்னை சென்றதால், தி.மு.க. கட்சி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போரை நிறுத்துவதற்கு இதுவே சரியான நேரம்: ஐநா பொதுச்செயலர் வலியுறுத்தல்
-
அரிதான புற்றுநோய் கட்டி 64 வயது மூதாட்டிக்கு அகற்றம்
-
கூடுதல் கட்டணம் தந்தும் பயணியருக்கு...மன உளைச்சல்!நெரிசலில் திணறும் பிரீமியம் 'ஏசி' பஸ்கள்
-
வல்லுாரில் மின் உற்பத்தி பாதிப்பு
-
இரு கடைகளில் திருட்டு: கொடுங்கையூரில் பீதி
-
'லிப்ட்' பாதை வழியாக விழுந்து தொழிலாளி பலி
Advertisement
Advertisement