பாரதியார் பல்கலையில் இரண்டு நாள் மாநாடு

கோவை:பாரதியார் பல்கலையின் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் துறை சார்பில் 'இன்க் டூ இன்டர்பேஸ்: இங்கிலீஷ் ஸ்டடீஸ் 2.O' என்ற தலைப்பில் இரு நாள் மாநாடு நடந்தது. இன்றைய டிஜிட்டல் காலத்தில் ஆங்கில ஆய்வுகள், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் டிஜிட்டல் காலத்தில் ஆங்கில ஆய்வுகளை மறுபரிசீலனை செய்வதன் அவசியம் குறித்து விளக்கம் அளித்தார். அவினாசிலிங்கம் மகளிர் உயர்கல்வி நிறுவன துணைவேந்தர் பாரதி ஹரிஷங்கர் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

ஐ.ஐ.டி. பேராசிரியர் சண்முகப்பிரியா, திருச்சி என்.ஐ.டி. பேராசிரியர் கார்த்திகா, பல்கலை பதிவாளர் ராஜவேல் பங்கேற்றனர்.

Advertisement