பாசனம் இல்லாத பயிர்களுக்கு பாதுகாப்பாக திடீர் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த திடீர் மழையால் நெற் பயிர்களுக்கு பாசனம் கிடைத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உத்திரமேரூர் வட்டாரத்தின் மொத்த நிலப் பரப்பில், 60 சதவீதம் விவசாய விவசாய நிலங்கள் ஏரி பாசனத்தை கொண்டதாக உள்ளது. இந்நிலையில், கடந்த பருவ மழைக்கு போதுமான அளவு மழை பெய்யாததால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பாமல் போனது.
எனினும், நடப்பாண்டு நவரை சாகுபடிக்கு உத்திரமேரூர் ஒன்றியத்தில் 28,000 ஏக்கர் நிலப் பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். அப்பயிர்கள் கதிர் வெளி வரத் துவங்கி சில இடங்களில் அறுவடைக்கு தயார் நிலையிலும் உள்ளன.
இதனிடையே, பல்வேறு பகுதிகளில் ஏரிகள் வேகமாக வறண்டதால் ஏரி பாசனம் மூலம் பயிரிட்ட விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் தட்டுபாடு ஏற்படக்கூடும் என கவலையில் இருந்தனர்.
குறிப்பாக இடையாம்புதுார், பாலேஸ்வரம், கடல்மங்கலம், மருதம், பொற்பந்தல், அன்னாத்துார், கிளக்காடி உள்ளிட்ட பகுதி ஏரிகளில் தண்ணீர் வறண்டு இறுதிகட்ட பாசனத்திற்கு தேவையான பாசன வசதியின்றி பரிதவித்து வந்தனர்.
இதேபோன்று, வாலாஜாபாத் ஒன்றியம், கோவளவேடு உள்ளிட்ட பகுதிகளிலும் ஏரி வறண்ட நிலையில், 250 ஏக்கர் நெல் பயிர்கள் கதிர் வந்த நிலையில் இன்னும் இரண்டு முறை நீர் பாய்ச்ச வேண்டி பாசனமின்றி இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது.
இந்த மழையால் பாசனம் இல்லாத நெல் பயிர்கள் கருகி விடாமல் பாதுகாத்திட வழிவகை ஏற்படுத்தி உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும்
-
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2.40 லட்சம் பறிமுதல்
-
32 சதவீத ராஜ்யசபா எம்.பி.,க்கள் மீது குற்ற வழக்குகள்
-
மெஸ்ஸி '900' கோல்... * கால்பந்து அரங்கில் சாதனை
-
'பைலட்' கிளன் பிலிப்ஸ்
-
பாத்திர தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்
-
ஈரான் போர் விவகாரத்தில் இந்தியாவின் மவுனம் சிறப்பான ராஜதந்திரம்: மத்திய அரசுக்கு சசி தரூர் புகழாரம்