32 சதவீத ராஜ்யசபா எம்.பி.,க்கள் மீது குற்ற வழக்குகள்
புதுடில்லி : ராஜ்யசபா எம்.பி.,க்களில், 32 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன; 14 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளதாக ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
ராஜ்யசபாவில், மொத்தம் உள்ள 233 உறுப்பினர்களில், 229 உறுப்பினர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை, ஏ.டி.ஆர்., அமைப்பு ஆய்வு செய்தது. இதில், ஜார்க்கண்ட் மாநில ராஜ்யசபா எம்.பி.,யின் பதவி தற்போது காலியாக உள்ளது.
கொலை வழக்கு
மேலும், மூன்று எம்.பி.,க்களின் பிரமாணப் பத்திரங்கள் ஆய்வுக்கு கிடைக்கவில்லை. இந்த ஆய்வில், சமீபத்தில் தேர்வான 37 ராஜ்யசபா எம்.பி.,க்களின் பிரமாண பத்திரங்களும் உட்படுத்தப்பட்டன.இதில், 229 எம்.பி.,க்களில், 73 பேர், அதாவது 32 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில், 36 பேர் மீது தீவிர குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு எம்.பி., தன் மீது கொலை வழக்கு நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நான்கு எம்.பி.,க்கள், மீது கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இதுதவிர, மூன்று எம்.பி.,க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. கட்சி வாரியாக பா.ஜ.,வில் 27 பேர், காங்கிரசில் 12 பேர், திரிணமுல் காங்., ஆம் ஆத்மியில் தலா நான்கு பேர், மார்க்சிஸ்ட் கம்யூ., மற்றும் பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளில் தலா மூன்று எம்.பி.,க்கள் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
அதிக சொத்து
ராஜ்யசபா எம்.பி.,க்களில் 31 பேர் அதாவது, 14 சதவீதம் பேர் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் சேர்த்துள்ளனர். பிரதான அரசியல் கட்சிகளில் பா.ஜ.,வில் ஆறு பேர், காங்.,கின் ஐந்து பேர், ஒய்.எஸ்.ஆர்., காங்., கின் நான்கு பேர், ஆம் ஆத்மியின் இரண்டு பேர், பி.ஆர்.எஸ்., கட்சியில் இருவர், தேசியவாத காங்.,கின் மூன்று பேர், சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளன. ஒட்டுமொத்த ராஜ்யசபா எம்.பி.,க்களின் சராசரி சொத்து மதிப்பு, 120.69 கோடி ரூபாயாக உள்ளது. இதில் அதிகபட்ச சராசரியாக ஒய்.எஸ்.ஆர்., காங்., எம்.பி.,க்களின் சராசரி சொத்து மதிப்பு 522.63 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. இதேபோல், அதிக சொத்துக்கள் உடைய ராஜ்யசபா எம்.பி.,யாக பி.ஆர்.எஸ்.,யைச் சேர்ந்த பண்டி பார்த்தசாரதி உள்ளார். இவருக்கு, 5,300 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக ஏ.டி.ஆர்., குறிப்பிட்டுள்ளது.
கேக்கவே கேவலமா இருக்கு.
ஓராண்டுக்குள் வழக்குகள் முடித்து வைக்கப்பட வேண்டும் என்ற சட்டம் இருந்தும் நீதித்துறை அதை மதிப்பது இல்லை. பிறகு எப்படி குற்றவாளிகளை பாராளுமன்றம் செல்வதில் இருந்து தடுக்க முடியும். நீதித்துறையை சீர்திருத்தாமல் இந்தியாவுக்கு வருங்காலம் என்ற ஒன்றே இல்லை.
குறைந்தபட்சம் மக்களை பாதிக்கும் பொதுவாழவில் இருப்பவர்களின் குற்றவழக்குகளையாவது 3வருடங்களுக்குள் முடிக்கும் தனிசிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்தவேண்டும் .அப்போதுதான் மக்கள் ஊழல்வாதிகளை கண்டறிந்து பொதுவாழகியிலிருந்து அவர்களை நீக்கமுடியும்
என்ன ப கருப்பு பணத்தை ஒலிச்சச்ச ?
we will eliminate black money, will bring back swiss bank account holders etc etc?
Lalit modi, Mallya and Nirav modi are happily roaming in UK....and we have done a thing......
Now BJP ministers are >100 cr and top the list......bottomline - all parties are the same.....மேலும்
-
சூலூரில் இப்தார் நோன்பு அ.தி.மு.க.வினர் பங்கேற்பு
-
தேர்தல் விதிகளை மீறிய தி.மு.க., மேயர், கவுன்சிலர் உட்பட மூவர் மீது வழக்கு
-
சட்டசபை தேர்தலில் கூட்டணி: ராமதாஸ், சசிகலா அறிவிப்பு
-
எனக்கு வேலை ஜாஸ்தியா இருக்கு; விஜய் குறித்து கேள்விக்கு கமல் 'டென்ஷன்'
-
சவுதியில் இந்தியர் உயிரிழப்பை உறுதி செய்தது மத்திய அரசு
-
அமெரிக்காவின் ரூ.1000 கோடி போர் விமானத்தை வீழ்த்தியது ஈரான்!