கே.எம்.சி. சட்ட கல்லுாரியில் கல்வி பண்பாட்டு விழா 

திருப்பூர்: திருப்பூர், கே.எம்.சி. சட்டக்கல்லுாரி ஆண்டு விழா 'தீரா உலா 2026' என்ற பெயரில் நடந்தது.

விழாவை கல்லுாரி தலைவர் லோகநாயகி, தாளாளர் அருணா ஸ்ரீதேவி, செயலாளர் ஞான வர்ஷினி, கல்லுாரி முதல்வர் சவுந்தரபாண்டியன் மற்றும் நிர்வாக அலுவலர் சசிகாந்த் ஆகியோர் இணைந்து, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். கல்லுாரி முதல்வர் வரவேற்று பேசி, ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக, நடிகர் சசி செல்வராஜ் பங்கேற்று, நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி, தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து, மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விளையாட்டில் சாதித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Advertisement